Thursday, December 10, 2009

மைக்ரோசாஃப்டின் அருமையான படைப்பு

பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering
செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும்
வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.

கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii.
விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி
செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான
வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project
Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்களையும் உடலில் அணிய வேண்டியது இல்லை.
மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம்
உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின்
அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம்
கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம்
செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான
விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே
பாருங்களேன்! அருமையாக உள்ளது. உண்மையிலேயே
நம்பவே முடியவில்லை.

தளம்:

http://www.youtube.com/watch?v=I9tmr8VDqN8



இன்றைய நகைச்சுவை

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு..
"ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..
".மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்..
"போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"
மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

No comments:

Post a Comment