Wednesday, January 20, 2010

புதிய தமிழ் தட்டச்சு.... மைக்ரோசாப்ட்டிலிருந்து....

  இன்றைய புதிய தமிழ் தட்டச்சு சாப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்கிறேன்...
இந்த மென்பொருளானது MS இணையதளத்திலேயே கிடைக்கும்... இதுவும் முன்பு கூறிய அழகி தட்டச்சு போன்றதுதான்... ஆனால் அதைவிட மிகவும் எளிமையானது..... இந்த மென்பொருளை  "http://bhashaindia.com/SiteCollectionDocuments/Downloads/IME/Indic2/TamilIndicInput2_32-bit.zip" எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...... இந்த softwareஐ நிறுவிய பிறகு start menu all programs சென்று indic tamil input எனும் இடத்தில் உள்ள உபயோகிக்கும் முறையை படித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த software மூலம் தட்டச்சு செய்யும்போது முன்பு கூறியது போலவே எந்த ஒரு தனிப்பட்ட font ம் நிறுவ தேவையில்லை...... உங்களுக்கு தேவையான தமிழ் வார்த்தையை  ஆங்கிலத்தில் டைப் செய்தாலே போதுமானது .... உதாரணமாக "அம்மா "
எனும் வார்த்தை தேவைப்படும்போது amma என டைப் செய்தாலே போதும் .....

மேற்கூறிய தளத்திலிருந்து வேறு இந்திய மொழிகளுக்கான சாப்ட்வேரையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ......

 இன்றைய நகைச்சுவை 

ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க… அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு “லெப்டுல போப்பா” ன்னு சொல்லியிருக்கார்…
அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்… நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்…
வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க…
அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்…” யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே… நான் ரொம்ப பயந்துட்டேன்…”
உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் “சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்… அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது…”
அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் ” உன் பேர்ல தப்பில்லப்பா…
நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்…
இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!”