Thursday, December 10, 2009

எளிய தமிழ் தட்டச்சு

எளிய முறையில் தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் ஒரு அருமையான
software ஒன்று இங்கு இணைத்துள்ளேன். இதன்மூலம் நீங்கள் தமிழில்
டைப் செய்ய விரும்பும் வார்த்தைகளை நேரடியாக ஆங்கில வார்த்தைகளை
டைப் செய்தாலே பெறமுடியும்.

உதாரணம்: "வணக்கம்" எனும் வார்த்தை தேவைப்படும்போது vaNakkam என
ஆங்கிலத்தில் டைப் செய்தாலே தமிழில் கிடைக்கும்.

இதற்கு எந்த விதமான தனிப்பட்ட font தேவையில்லை. நீங்கள் இந்த
software ஐ உபயோகப்படுத்தி உங்களுடைய எவ்வகையான windows
பயன்பாட்டிலும் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.

உம்: MS Word, Excel, Yahoo messenger and all Internet browsers.

இந்த software மூலம் தயாரித்த தமிழ் ஆவணங்களை எல்லா விதமான
E-Mail மற்றும் பிற computerகளிலும் எளிமையாக படிக்க முடியும்.

காரணம் இதில் Latha எனும் Font மூலம் தமிழ் வார்த்தைகள்
உருவாக்கப்படுகிறது. இந்த Latha font விண்டோஸின் ஒரிஜினல்
font ஆகும். ஆகவே தனிப்பட்ட font நிறுவ தேவையில்லை.
இவை windows xp முதல் windows 7 வரை அனைத்திலும்
இயங்கும்.

Download மற்றும் செயல்பாட்டிற்கு கீழ்காணும் தளத்தை அணுகவும்

தலைமை தளம்:
www.azhagi.com/

பதிவிறக்கம்:
http://www.azhagi.com/sai/Azhagi-Setup.exe


இன்றைய நகச்சுவை

வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...
அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?
அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..
நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..
இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!
பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? .. விலையைச் சொல்லு..!
சொன்னா கேளுங்க.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!
வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..
கிளி.." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..
கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...
புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு... அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???

No comments:

Post a Comment