| எயிட்ஸ் எனும் எமனைப்பற்றி... நெட்டில் சுட்டது ....... | | |
STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் யாவை? STD என்பது பொதுவாக பாலுறவால் பரப்பப்டும் வியாதிகள். சில சமயங்களில் இவை பாலுறவால் பரப்பப்படும் தொற்று எனவும் கூறப்படும். உடலுறவு கொள்ளும்போது இருபாலரிடமும் தோன்றும் திரவத்தின்மூலம்இ பெண் ஆண் உறுப்புகளின் தோல் மூலமும் நோய் பரவும்.HIV வைரஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பிலிருந்து உடல் உறவின்போது வெளியேறும் ரத்தத்திலும், திரவத்திலும் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இதற்கு மருந்தோ குணமோ இல்லாததால் மரணமே சம்பவிக்கும், HIV தொற்றின் மூலம் ஏற்படும் மரணத்தின் நுழைவாயில் தான் AIDS. இத்தொற்றுக்கிருமியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகம். ஏய்ட்ஸ் நோயாளியிடமிருந்து பரவும் எய்ட்ஸ் கிருமி மிகவும் அபாயகரமானது எளிதில் தொற்றக் கூடியது. ____________________________ HIV என்பது என்ன? HIV என்பது மனிதனுக்கான எதிர்ப்புசக்தியுள்ள வைரஸ் ஆகும், CD4 என்பபடும் வெள்ளை இரத்தசெல்கள் எதிர்ப்பு சக்தி வைரஸ்ன் பணிகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. HIV மெதுவாகவும் சீராகவும் இவ்வைரஸ்களை அழிக்கிறது, (1 கன மி, மீ ரத்தத்திற்கு 200 செல் என்ற விகிதத்திற்கு குறைந்தால் அதுவே மரணத்தின் எல்லையெனக் கொள்ளலாம். வைரஸ் என்றால் என்ன? வைரஸ் என்பது நோய் உண்டாக்கக்கூடிய ஒரு செல் கிருமி.. இந்த வைரஸ் ஒரு புதிய செல்லில் நுழைந்து அதை அழித்துவிடும்.HIV+ என்றால் என்ன? HIV+ என்பது ஒருமனிதன் HIVயால் பிடிக்கப்பட்டுள்ளான் என்பதையும் HIV- என்பது HIVயால் தாக்கபடவில்லை என்பதையும் குறிக்கும்.AIDS என்றால் என்ன? எதிப்பு சக்தியற்ற காலக்கட்டம் என்பதேயாகும், இது பரம்பரை நோய் அல்ல. HIVயால் பாதிக்கப்பட்ட தனிநபரின் தொற்று. HIV (கிருமி) ஒருமுறை உடலில் நுழைந்துவிட்டால், அது மெதுவாகவும் சீராகவும் CD4 என்ற எதிர்ப்புசக்தியுள்ள செல்களை அழித்து, AIDS என்ற சாவை நோக்கிப் பயனாக்கும் காலகட்டத்திற்குக் கொண்டு சென்றுவிடும்,____________________ இத்தொற்று பரவுவதற்கான வகைகள் யாவை? இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள இரத்தத்திலும், ஆணின் உள் உறுப்பிலும், பெண்ணின் உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவங்களிலிருந்தும், தாய்ப்பாலிலும் இந்த வைரஸ் இருக்கும், உடலுறவின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும், தாய்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவும், உடலுறவின் மூலம் பரவுவதே மிக அபாயகரமானது. சரியாக சுத்திகரிக்கப்டாத ஊசிகள் (injection needles) அல்லது ஒரே ஊசியை உபயோகித்து பலருக்குப் போடப்படுவதன் மூலம் இந்த வைரஸ் பரவும், HIV,AIDS ஒரு மனிதனை எவ்வளவு நாட்களில் தாக்கத் தொடங்கும்? HIV வைரஸ் மனிதனின் ரத்தத்தில் நுழைந்தவுடனேயே CD4 செல்களை அழிக்கத் தொடங்கிவிடும். வைரஸ்யின் இனவிருத்தி தொடங்கியதுமே அது அங்கேயே வாழ ஆரம்பித்துவிடும். அதன்பின் அதனை நம்மால் அழிக்க இயலாது.HIV,AIDS பரம்பரையா? இல்லை. உடலுறவினாலும் (பாதிக்கப்பட்டவரிடம்) பாதிக்கப்பட்டவரின் ரத்தம் காயங்களிலோ, இரத்தத்தானம் மூலமோ பரவும்.____________________ HIV,AIDS ஏன் குணமாக்கப்படமுடியவில்லை? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 1) இந்த செல்லை மட்டும் இனம் கண்டு நம்மால் அழிக்கமுடியாது. 2) வைரஸ் செல்களில் தொற்றியுள்ளதா இல்லையா என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. 3) வைரஸ் செல்களில் நீண்ட நாட்கள் இருக்கக்கூடும். மருந்துகள் தொற்று செல்கள் யாவற்றையும் அழித்தாலும் அவை மறுபடி மருந்துகளை நிறுத்தியவுடன் தோன்றக்கூடும் 4) அம்மருந்துகளையே ஜீரணிக்ககூடிய தன்மை உடையது அந்த வைரஸ். ஹோமியோபதி அல்லது ஆயுர்வேதம் மூலம் பயனடைய முடியுமா? நமக்குத் தெரிந்தவரை எந்த ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மருந்துகள் முற்றிலுமாக இந்த வைரஸ் கிருமிகளை அழிக்கவோ இயலாது. சில ஆயுர்வேத மருந்துகள் எதிர்ப்புசத்தியை அதிகரிக்கச் செய்யுமேயன்றி HIVஐ முற்றிலும் குணமாக்க இயலாது. அநேக பேர் ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மூலம் இதைக் குணமாக்க முயல்கிறார்கள். ஆனால் இவையாவும் பொய்யானவையே. குணமாக்குவதாக கூறி ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் மேற்படியான மருத்துவர்கள்.இதுவரை (இதற்கான) HIV,AIDSசுக்கான தடுப்பூசிகள் ஏன் இல்லை? இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை 1) இத்தடுப்பூசிகளின் மூலம் நோய்த்தடுப்பு சக்தியின் வீரியமே கூட குறையலாம் 2) நோய் எதிர்ப்பு சக்தித் திறனைத் துல்லியமாகக் கணக்கிட இயலாததால் 3) வைரஸ்களின் உற்பத்தித்திறனைக் கணக்கிட இயலாததால் 4) தடுப்பூசியின் திறனைத் துல்லியமாக கணக்கிட முடியாததால் 5) அறிவியல் பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் ஆய்வுகள் மனித உடலில் இவ்விஷயத்தில் சரிவதாது என்பதாலும். ____________________ HIV எவ்வாறு பரவுகிறது? HIV பரவுவதற்குகான வெவ்வேறு வகைகள் இத்தொற்று பாதிக்கப்பட்பவர்களின் உடலிலிருந்து வெளியேறும் இரத்தம் மற்றும் ஆண் பெண் உடலுறுப்புகளிலிருந்து வெளியேறும் திரவங்கள் ஆகியவை மூலமே பெரும்பாலும் இத்தொற்று பரவுவதற்கான முக்கியக்காரணமாகும். பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் அக்குழந்தைக்குப் பரவுகிறது, சுத்திகரிக்கப்படாத ஊசிகள் மூலமும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்படும், ஊசியை சுத்தம் செய்யாமல் அதே ஊசி மூலம் மற்றவருக்கும் போடுவதாலும் இத்தொற்று பரவுகிறது. HIV,AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தொடுவதாலோ, முத்தம் கொடுப்பதாலோ, பிளேடு மற்றும் ஊசியால் குத்தினாலோ இந்நோய் வரவு வாய்ப்புள்ளதா? HIVஅல்லது AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் உங்களது ரத்தத்துடன் ஏதேனும் ஓர் முறையில் கலந்தாலன்றி நீங்கள் தாக்கப்பட வாய்ப்பில்லை. மற்றபடி முத்தம் கொடுப்பதாலோ, தொடுவதாலோ இத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதே மருத்துவர்களின் கருத்தாகும்.பாதிக்கப்பட்டவர்களுட்ன உடலுறவு வைத்துக் கொள்ளாவிட்டாலும் கூட AIDS வருவதற்கான வாய்ப்பு உண்டா? ஆம் வாய்ப்பு உள்ளது. 1) இந்நோய் உள்ளவரின் உடலிலிருந்து வெளிவரும் ரத்தம், அசந்தர்ப்பமாக அவரின் உடலுக்குள் செலுத்திய ஊசி சுத்திகரிக்கப்படாமல் வேறொருவர் உடலில் செலுத்தப்பட்டால் அந்த ஊசியின் மூலம் பரவ வாய்ப்புள்ளது. 2) அசந்தர்ப்பமாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகித்த கத்தி, ஊசி போன்றவற்றை உபயோகிப்பதால் பரவ வாய்ப்புள்ளது, இது பெரும்பாலும் டாக்டர்களுக்கோ அல்லது நர்ஸ்களுக்கோ ஏற்படும் அபாயமாகும், 3) போதை ஊசி போட்டுக் கொள்பவர்க்ள் மேற்கூறியபடி இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஊசியைப் பகிர்ந்து கொள்வதால் (பாதிக்கப்பட்டவர் உபயோகித்த அதே ஊசியை உபயோகப்படுத்தினால்) பரவும். HIV பாதிக்கப்பட்டவருடன் ஒரு பெண் காண்டம் உபயோகித்து உடலுறவு வைத்துக்கொண்டால் அப்பெண் பாதிக்கப்படுவாரா? திருமணத்திற்கு முன் வைத்துக் கொள்ளும் உடலுறவினால் AIDS வர வாய்ப்பு அதிகமாகவும் அதே சமயம் திருமண வாழ்க்கையில் ஏற்படாமலும் இருக்கக் காரணம் என்ன? திருமணத்திற்கு முன் ஒரு ஆண் ஒரே பொண்ணுடன் உறவு வைத்துக் கொண்டாலும் அப்பெண் அல்லது ஆண் HIVஆல் பாதிக்கப்படாதவரை கவலையில்லை. ஆனால் இருவரில் யாருக்கு இந்நோய் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம், தவிர திருமணத்திற்கு முன் ஒரு ஆண் அல்லது பெண் பலருடன் உடலுறவு கொள்வதாலேயே இந்நோய் வருவதற்கும், பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. திருமணத்திற்குப் பின் என்றும்போது அப்பெண்னைப் அல்லது ஆணைப் பற்றிய முழுவிபரமும் தெரியவரும்,___________________ காண்டம் 100% AIDSக்குப் பாதுகாப்பானதா? ஒரு காண்டம் உபயோகிப்பதைக்காட்டிலும் இரண்டு காண்டம் உபயோகிப்பது பாதுகாப்பனதா? இரண்டு காண்டம் உபயோகிப்பது ஒன்று உபயோகிப்பதைக் காட்டிலும் சிறிது அதிகம் பாதுகாப்பு உடையது, முன்பு கூறியபடியே காண்டங்கள் கிழிய நேர்ந்தாலோ அல்லது சரியான நேரத்தில் வைக்கப்படாவிட்டாலோ தவறு நேரிட வாய்ப்புண்டு. பெட்ரோலியம் கலந்த எண்ணைகளை காண்டத்தின் மீது தடவுவதால் காண்டத்தை அவ் எண்ணைய்கள் பலவீனப்படுத்திவிடும்.குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டுள்ள ஒரு ஆணோ அல்லது பொண்ணோ HIV+ உள்ளவருடன் உடலுறவு கொண்டால் பாதிக்கப்படுவாரா? குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்பதை குழந்தைப் பிறப்பைக் குறைப்பது அல்லது இதில் தடுப்பதுவேயாகும். இது கட்டுப்படுத்துமே தவிர பாதிப்பைக் குறைக்க வழியல்லை. இதில் ஆண்களானால் அவர்களின் விந்து அணுவும் பெண்களானால் கரு அணுவும் இந்த அறுவை சிகிச்சை மூலம் வெளிப்பட்டு ஒன்று சேர வாய்ப்பு இல்லை. HIV+ பாதிக்கப்பட்ட ஆணோடோ அல்லது பெண்ணோடோ உடலுறவு கொள்ள நேர்ந்தால் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். (காண்டம் உபயோகித்தாருமே)தாய்க்கு HIV இருந்து அவளது கர்ப்பத்திலுள்ள குழந்தை பாதிப்படையுமா? கர்ப்பத்திலுள்ள குழந்தையைப்பாதிக்காது. 1) ஆனால் குழந்தை பிறந்தவுடன் நோய் தாக்கும். குழந்தை பிறப்பின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவதால் அந்த ரத்தத்தின் மூலம் நோய் பரவ வாய்ப்பு உண்டு. 2) தாய் பாலுட்டும்போது தாய்ப்பாலின் மூலம் HIV பரவும். சிசேரியன் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு AIDS தாக்கப்படும் வாய்ப்வு உள்ளதா? சுகப்பிரசவம் மூலம் (AIDS தாயிடமிருந்து) பிறக்கும் குழந்தைகளைவிட சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு AIDSன் தாக்கும் குறைவே. தாய் HIV+ஆல் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற நிலையில் மட்டுமே சிசேரியன் முறை ஏற்றது. ஆவ்வாறு தாய் HIV+ஆல் பாதிக்கப்படவில்லை என்னும்போது சிசேரியன் தேவையற்றது. இயற்கை பிரசவமே சரியானது. ஆப்ரிக்கா ஆசியா ஆகிய நாடுகளில் மருத்துவ வசதி குறைவாயிருப்பதால் மேற்குறிப்பிட்ட சிசேரியன் முறை அந்தாடுகளில் பயன்படாது. தவிரவும் இந்த சிசேரியன் அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவக்கருவிகளின் சுகாதாரமற்ற தன்மையாலும்கூட தாய் சேய் இருவருக்குமே HIV தொற்ற வாய்ப்புள்ளது.HIV,AIDSஆல் தாக்கப்பட்ட பெண்ணின் மூலம் அவளது குழந்தையத் தாக்கக் கூடுமா? ஆம். சுகப்பிரசவத்தின்போது பெண்ணின் உடலில் அநேக திசுக்களும் தசைகளும் கிழியவும் அவற்றின் மூலம் இரத்தம் வெளியேறி குழந்தையைப் பாதிக்கும். (குழந்தைக்கும் தொற்றும்)சுய இன்பச் செயல்பாட்டினால் AIDS தாக்கக்கூடுமா? ஓரு தந்தையின் மூலம் குழந்தைக்குப் வரவுமா? புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தந்தையால் எந்த பாதிப்பும் இல்லை, தந்தையின் மூலம் தாய்க்கு முதலில் பரவி பின் குழந்தை பிறந்தவுடன் அது குழந்தைக்கும் பரவுகிறது.HIV,AIDS இரத்தத்துடன் எவ்வாறு கலக்கிறது? இரத்த அணுக்களே HIV,AIDSன் விருந்தாளி என்றால் உடலுறவு எப்படி பாதிக்கும்? HIV,AIDS வைரஸ்கள் இரத்த அணுக்களிலேயே அதிகம் காணப்பட்டாலும் உடலிலுள்ள மற்றதிரவங்களிலும் இந்த வைரஸ்கள் அதிகம் இருக்கும், பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் மூலம் ஆணின் விந்தணு மூலமும் பரவ அதிகபட்ச வாய்ப்பு உள்ளது, சில சமயங்களில் உடலுறவின்போது ஏற்படும் இரத்தப் போக்கினாலும் பரவ பாய்ப்புண்டு.ஒருவன் HIV,AIDSஆல் எவ்வளவு காலத்திற்குள் தாக்கப்படுவான்? HIV வைரஸ் இரத்த ஓட்டத்தில் கலந்தவுடனேயே CD4 செல்களை அழிக்கத்துவங்கும். இந்த வைரஸ்களின் உற்பத்திப் பெருக்க சுழற்சி துவங்கியதுமே முன்னேறிக் கொண்டிருக்கும். உயிர் உள்ளவரை எதுவும் செய்ய இயலாது.HIV,AIDS பாரம்பரியத்தைப் பொறுத்ததா? இல்லை. HIVன் பாதிப்புக்காளான ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதேயாகும். இதற்கும் பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தனிப்பட்டவரின் உடலை எவ்வாறு பாதிக்கிறது? HIV தொற்றின் நிலைகள் யாவை? HIV மூன்று விதமாகக்கணிக்கபடுகிறது 1) ஆரப்பநிலை 2) தீவிரமானது 3) எய்ட்ஸ். 1) ஆரம்பநிலை HIV பரவி 3 முதல் 6 மாதங்கள் வரை, இந்நிலையில் வைரஸ் கிருமிகள் தீவிரமாக விருந்தியாகும், நோய் எதிர்ப்புசக்தி குறையத் தொடங்கும். வைரஸ் தீவிரமாவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகப் வரவும். 2) தீவிரமானது சாவுக்கும் வைரஸ்க்குமான இடைப்பட்ட நேரம். உடலைத் தொடர்ந்து அழித்துக்கொண்டே நிலையாயிருக்கும், CD4ன் எண்ணிக்கை மெதுவாகக் குறையத்துவங்கும். இந்திலை 2டில்லிருந்து 10 ஆண்டு வலையிலான எண்ணிக்கையிலிருக்கும், இந்தகாலகட்டம் அம்மனிதனின் உடல்நிலையையும் வைரஸையும் பொறுத்தது. 3) எய்ட்ஸ் CD4ன் எண்ணிக்கை மிகக்குறைந்தநிலையும் வைரஸ் எண்ணிக்கை அதிகப்படுவதுமே ஆகும். இக்காலகட்டத்திலேயே மற்றவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது. CD4ன் எண்ணிக்கை பூஜ்யமானபோது கூட துணை காரணமாகவே இது சாத்தியமாகும். நோயைப் பரப்பாமலிருக்க உள்ள காரணங்களை நோயாளிக்கு விளக்க வேண்டியது அவசியம், HIV தொற்றின் அடிப்படை அறிகுறிகள் யாவை? ஆரம்ப நிலையில் HIV வைரஸ் தொற்றிய பின் 3 முதல் 6 மாதங்களில் மாறுதல்கள் தெரியரும், இக்கட்டத்தில் இவ்வைரஸ்கள் அபிவிருத்தி அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். இன்புளுயன்ஸா போன்ற நோய்களும் தலைவலி, சக்தி இழப்பு, காய்ச்சல், குளிர், வயிற்றுப்போக்கு ஆகியவை நோயாளிக்கு வரலாம். இவையாவும் இருவாரத்தில் குணமாகிவிடக்கூடும். இதைக்கொண்டு HIVஜக் கண்டுபடிப்பது கடினம், இந்த அறிகுறிகள் மறைந்த பின்னும்கூட HIV வைரஸ்கள் உடலில் தங்கியிக்கக்கூடும். ஆகவே இரத்தப்பரிசோதனை செய்வதே எல்லாவாற்றிலும் சிறந்ததாகும், இன்புளுயன்சா, அம்மை போன்ற வைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நோய் குணமாகி 3 மாதம் கழித்தபின் பாரக்கப்படும் இரத்தப் பரிசோதனைக்கே நாம் சிபாரிசு செய்கிறோம். ஏனெனில் அதன் பின்பே சரியான முடிவுதெரியவரும். ஆகவே பொறுத்திருந்து சோதனை செய்வதே சரியானதாகும், HIVன் தீவிர நிலைக்கான (Chronic) அறிகுறிகள் யாவை? HIVன் தீவிர நிலை ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்தும், அவர் உடலைப் பேணும் முறையிலும், தொற்றின் தீவிரத்தையும் பொருத்தது, இத் தொற்று உள்ளவர்கள் இன்புளுயன்சா வயிற்றுப்போக்கு போன்றவைகளுக்கூட (குணப்படுத்த) அதிகநாட்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ள நேரும். பின் இவையே நிமோனியாவில் கொண்டு விடலாம். வயிற்றுப்போக்கு முதல்கட்ட மருந்துகளில் குணமாகாமல் மாதக்கணக்கில்கூட ஆகலாம், எடை குறைவு, தலைவலி, புண் முதலிய வரலாம்.அடுத்த போஸ்டில் ஆங்கிலத்துல தற்காலிக மருத்துவ முறைகளைப்பற்றி சுட்டுத்தறேன்..... |


No comments:
Post a Comment