
[எழுதியது: டிமிடித் பெட்கோவ்ஸ்கி]
சிகரட் பிடிக்கும் நம் நண்பர்கள் அதில் இருந்து விடுபட
'இமேஜ் தெரபி' எனும் மனோதத்துவ சிகிச்சையின் பகுதி - 01.
நண்பர்களே முழுமையாக படித்துவிட்டு பகிரவும், இதில் ஒருவர் திருந்தினாலயே எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக
கருதுகிறோம்...!
I Quit Smoking - Part 1.
சமாதானப் பேச்சு வார்த்தை...!
என் முதல் கட்டப் பணி உங்களுக்கு சில தகவல்களை தெரிவிக்க
விரும்புகிறேன். இது
உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். தெரிந்து இருந்தால்
நீங்கள் மிகப்பெரிய குற்றவாளி! தெரியாதவர்களை மன்னித்து விடுகிறேன்.
கடவுள் நமக்கு இந்த உடலைத் தந்திருக்கிறார் வெளியே தோலும்
கண்களும் மூக்கும் கை கால்களும் தெரியும் உறுப்புகள் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியும். ஆனால் என் சாண் உடம்பு
தோல் போர்த்தி
உள்ளே நடக்கும் விஞ்ஞான அற்புதங்கள் பற்றி எத்தனை பேருக்குத்
தெரியும்..?
முதல் உதாரணம்: நாம் சுவாசிப்பது நமக்குத் தெரியும். ஆனால் உள்ளே
என்ன நடக்கிறது? நம்
நுரையிரலில் என்ன நடக்கிறது அது வெளிப்படுத்தும் பொருள் என்ன? மேலே பார்க்கலாம்!.
நமது உடலின் தசைகளை புதுப்பிக்க ரத்தம் தேவைப்படுகிறது. இரத்தத்தில்
சிகப்பணுக்கள் உள்ளன.
இந்த அணுக்கள் கரையக் கூடிய ஆக்ஸிஜனை திசுக்களுக்கு கொண்டு செல்கின்றன. இதனால் செல்கள் உயிர் பெறுகின்றன.
அது சரி இரத்தத்தில் எப்படி ஆக்ஸிஜன் கலக்கிறது?
வியக்கப் போகிறீர்கள்...மெல்லப் படியுங்கள்... புரியும் வரை
படியுங்கள்...அதுவரை நான் உங்களுக்காக காத்து இருப்பேன்...
கடவுளின் மிகப்பெரும் கருணையில் இந்த வினை மாற்றம் நுரையீரலில் நிகழ்கிறது.
நமது நுரையிரல் பஞ்சு போன்ற அல்லது ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பில்
உள்ளது. நுரையிரல் வெளிக்காற்றை
உட்கொள்ளும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ஸ்பாஞ்சின் உள்ளே போகிறது. சிறிய சிறிய துவாரங்களின் முனைக்கு
செல்லும் போது
காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அங்குள்ள மிகச்சிறிய இரத்த நாளத்தின் முனையில் உள்ள ஒரு
மைக்ரான் அளவுள்ள இரத்தம் உடனே தன்னுள் ஆக்ஸிஜனை கரைத்து உட்கொண்டு உடனே பறக்கிறது. பறந்து செல்லும் இந்த இரத்தம் தான்
திசுக்கள் உள்ளே
சென்று அதை புதுப்பிக்கிறது.
எதற்கு இதை நான் உங்களிடம் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது......
சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை-
1. சிகரெட்
பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800
டிகிரி செல்சியஸ் அதாவது இந்த
வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது.
2. இதே
அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும்
உணவின் ருசி அறியாமல்
செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது உங்களுக்குத் தெரியாமல் போகிறது.
இதென்ன? தின்பவனுக்கு
கண் இல்லையா?
எனக்கு தெரியாதா? முட்டையா
அல்லது தயிரா என கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளுக்கு பரிட்சை வைக்கிறேன். உங்களால் கண்ணை
மூடிக்கொண்டு நான் தரும் உணவில் உள்ள பொருள்களை மூக்கையும் பொத்திக் கொண்டு
உங்களால் சொல்ல முடியும்
என்றால் உங்களுடன் சேர்ந்து நானும் புகைபிடிக்க தயார்!
அவ்வாறு இல்லையென்றால் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து
கொண்டு நீங்கள் உங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட தயாரா?
சவால்!!!!!!!!!!!!
3. நீங்கள்
ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார். 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக
தாக்குகிறது.?
எப்படி?
புகை என்பது கரியின் மைக்ரான் அளவுள்ள மாவுபொடி ஒரு கப்
கோதுமைமாவை உங்களால்
சுவாசிக்க முடியாது! ஆனால் பத்து சிகரெட் குடித்து முடிக்கையில் ஒரு கப்
கோதுமை மாவு அளவுள்ள கரித்துகள்கள் உங்கள் நுரையீரலின் உளளே சென்று குதியாட்டம்
போடுகிறது!.
அதனால் என்ன போடட்டுமே? நமக்கென்ன கவலை என்பவர்களே?
ஆடிக்களைத்தபின் அது ஓய்வெடுக்க அமரும் இடுக்கு நான் முன்
சொன்ன சிறிய துவாரம்
கடவுளின் கருணைக் கொடையான காற்று ஆக்ஸிஜன். திரவ ஆக்ஸிஜனாக மாற்றும் அந்த துவாரம். !!!!!!!!!!!!!!
உங்களின் பிராணவாயு துவாரங்களை நீங்கள் உங்கள் உதவி கொண்டே
அடைத்து முதல் கட்ட வியாதியை வரவழைத்துக் கொள்கிறீர்கள்.....
கரித்துகள்கள் மைக்ரான் அளவு! அந்த துளையும் மைக்ரான் அளவு
ஆப்பு அடித்தது போல
மேலே உட்கார்ந்து மேற்கொண்டு காற்றை உள்ளே விடாமல் அடைக்கிறது.
பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துவராங்களை வெறும் இருபது
சிகரெட்டுகள் பிடிப்பதன்
மூலம் அடைத்து விட முடியும் இங்கே தான் தொடங்குகிறது உங்கள் ஆரம்ப கட்ட நோய்!.
திடீரென்று உங்களுக்கு சுவாசத்தில் மாறுதல் என்னவோ
அதிகமாக காற்று தேவை போல மாடியேறினால் மூச்சிரைக்கிறது. ஓடிச்சென்று பஸ் ஏற
முடியவில்லை !
ஆக்ஸிஜன் குறைவினால் உங்கள் தாம்பத்திய உறவு சரியில்லை
சட்டென்று உங்களுக்கு மார்பு சளி வந்து எளிதில் குணமாக முடிவதில்லை.
என்னது? தாம்பத்திய
உறவில் பிரச்சனையா? போய்
சொல்கிறீர்கள் சார்..... எனக்கு காத்து குத்தியாகி விட்டது என்று சொல்லும் காம
ராஜர்களே.... கேளுங்கள்
.....
ஆம்! நண்பர்களே தாம்பத்திய உறவின் போது மிக அதிகமான
ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே உங்களின் உயிர் உறுப்பு தன் பணியை
செய்யும் இல்லையேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும். குட் நைட் சொல்லும் பரவாயில்லையா? நீங்கள் இழப்பது இருக்கட்டும்.... உங்களின் பார்ட்னரை பசியோடு விடுவதில் என்ன
நியாயம்?
இது தேவையா?
எங்கே இப்போதாவது உங்களுக்கு தோன்றுகிறதா? சிகரெட்டை விட வேண்டும் என்று?
ஆம் தோன்றுகிறது என்போருக்கு சபாஷ்!
இன்னும் இல்லை என்பவருக்கு இன்னமும் பல கதைகள் இருக்கிறது.
சொல்லிக் கொண்டே போவேன்...வெட்கமில்லாமல்....சிகரெட் குடிப்பதற்கு நீங்கள் வெட்கப் படவில்லை...அதன்
தீமைகளையும் விளைவுகளையும் சொல்லுவதற்கு நான் என் வெட்கப் பட வேண்டும்?
அடுத்த மிகப்பெரிய வெடிகுண்டு தலைமுறை மாற்றம்! சரியான அளவில்
இரத்ததில் ஆக்ஸிஜன்
இல்லாமல் போனால் உங்களின் உயிர் அணுக்கள் பாதிக்ப்படுகிறது.
எவ்வாறு?
புரத சத்துக்களும் பின்னர் கண்ணிற்கும் அறிவிற்கும் புலப்படாத
பல நுண்ணிய விஷயங்கள்
மூலம் மனிதனின் உயிரணுக்கள் உண்டாகின்றன. ...... குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள
இரத்ததில் உயிரணுக்களின் குரோமோசோம்களின் எழுதப்படும் தலைமுறை பற்றிய விவரங்களில் குறுக்கீடு ஏற்பட்டு உங்கள்
குழந்தை உங்கள் டி என் ஏ விலிருந்து மாறுபட்டு ஒரு தலைமுறை உறவு விட்டு போகிறது.
அதனால் என்ன என்று கேட்கும் ஜெனடிக்ஸ் அறியா நண்பனே? ஜீன்கள் குறைந்தால் எல்லா வித நஷ்டங்களும் உனக்கில்லை .... உன்னால் பிறக்கும் குழந்தைக்குத்தான்
....என்ன வெல்லாம் நடக்கும்?
உங்கள் குழந்தை நோஞ்சானாக பிறக்கும்! சுவாச கோளாறு கண்பார்வை கோளாறு மற்றும்
சில சமயங்களில்
நோய் எதிர்பு சக்தி குறைந்து எடுத்ததற்கெல்லாம் வியாதி என்று
எப்போதுமே நோயில் விழும் அபாயம்.!
யார் காரணம் இதற்கு? உங்கள் உடலை கெடுத்துக் கொள்வது உங்கள் உரிமை எனில் உங்களால்
பிறக்கும் உயிர்க்கு நீங்கள் எப்படி தீங்கு நினைக்கலாம்?
அக்குழந்தைக்கு நல்ல கல்வியும் ஒழுக்கமும் கொடுக்க வேண்டிய தந்தையே அதன் நோய்க்கான
மூலக்காரணம் என்று
அதற்கு தெரிய வரும் போது உங்களின் மரியாதை என்ன ஆகிறது?
நினைத்து பாருங்கள் கையில் சிகரெட்டுடன் நீங்கள்! விந்தி
விந்தி நடந்து இருமிக் கொண்டு வரும் உங்கள் மகன்! அல்லது மகள்!!
யார் காரணம்?
நீங்கள் இல்லையா?
அதன் காரணம் உங்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லையா? சைத்தான் அல்லவா இது ? விட்டுவிட வேண்டுமா இதை?
உங்களுக்கு எந்த நல்ல பயனும் இல்லை! உங்கள் தாம்பத்திய உறவு திருப்தியில்லை!!
உங்கள் குழந்தை நோயுள்ள சவலைக் குழந்தை!!! காலம் முழுதும் குற்ற உணர்வுடன் உங்கள் வாழ்க்கை!!!!
கவலையாக இல்லை உங்களுக்கு? இதோ என் சமாதான உடன்படிக்கை உங்களுக்கு !
இந்த கணமே வேண்டாம் என விட்டுவிடுங்கள்!
அதன் பயனாக நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். கீழ்
கண்டவற்றை நீங்கள் உடனே அடையலாம்.....
1. புகைப்பழக்கம்
விட்ட இரண்டாவது நாளிலிருந்து உங்களின் நாவு மீண்டும் பழைய சுவையை
திருப்பித்தரும்.( கடவுள் மன்னிக்கிறார் உங்களை)
2. பாலின்
மெல்லிய சுவையையும் மணத்தையும் அறிவிர்கள்.
3. மல்லிகைப்பூ
மணம் புகையிலை மணமில்லாது நல்ல வாசம் தரும்.
4. தயிருக்கு
இத்தனை சுவை உண்டா என உங்கள் மனம் வியக்கும்.
5. சுற்றிலும்
நடக்கும் விஷயங்களில் மனம் ஆழமாக பதியும் இதெல்லாம் நீங்கள் புகைப்பதை விட்டுவிட்ட
48 மணி நேரத்தில் நடக்கும்.
ஆனால் உங்கள் பிரச்சனை எனக்குப் புரிகிறது! என்னால் ஒரு
மணிநேரம் கூட புகை பிடிக்காமல் இருக்க முடியவில்லையே என்பவர்களுக்கு!
நான் இருக்கிறேன் வழி சொல்ல!
எத்தனை பேர் என்னுடன் பயணிக்கத் தயார்?
என்னுடன் பயணம் செய்பவர்கள் அனைவரும் நிச்சயம் இதிலிருந்து
விடுதலை பெறுவீர்கள் நம்புங்கள்! நிச்சயம்! உறுதி.!
புகைப்பதை நிறுத்த முடியாமல் போவதின் காரணம் என்ன ?
சிகரெட்டில் உள்ள புகையிலையில் 'நிக்கோட்டின்' என்னும்
ரசாயனம் தான்.
இது வெள்ளைக்கார துரையின் செயல்பாடு போல! நண்பன் போல முதலில்
வரும், பின்னர்
விருந்தாளியாகி களிக்கும், அதன்
பின் உங்கள் எஜமானனாகி உங்களை அடிமை செய்யும்!
நிகோடினும் அது போலவே செயல்படுகிறது.
முதல் முறை நீங்கள் புகை பிடித்த போது 'கிர்'ரென்று
ஒரு கிறக்கம் வந்ததா? அதை போதை
எனகிறிர்களா? அது போலவே
ஒவ்வொரு சிகரெட்டிலும் வரும் என்று நினைத்தீர்கள் இல்லையா?
ஆனால் அது நடக்காமல் சில நாட்கள் கழித்து
காலையில் பிடிக்கும் சில
சிகரெட்டிற்கு மாத்திரம் போதை தரும் சங்கதி இருந்தது இல்லையா? நாளின்
மற்ற சமயங்களில் அது போல நடக்கவில்லை? கொஞ்ச
நாள் கழித்து
காலையிலும் அந்த முதல் சிகரெட்டும் போதை தரவில்லை இல்லையா?
ஆனால் நடந்தது என்ன முதல் முதல் குடித்த சிகரெட் உங்கள் நண்பன்
போல வ்ந்து போதை
தந்தது! காலையில் போதை தந்த சிகரெட் உங்கள் விருந்தாளி ஆனது! பின்னர் நீங்கள்
புகைத்த அனைத்து சிகரெட்டிற்கும் நீங்கள் அடிமையாகி போனீர்கள்!. காலையில் டாய்
லெட் போக உங்களுக்கு முதல் தேவை ஒரு சிகரெட்....
உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றம் என்ன? ஏன் திடீரென்று ஒரு நாளைக்கு இத்தனை சிகரெட் பிடிக்க
ஆரம்பித்தீர்கள்?
இதன் பெயர் தான் 'நிக்கோட்டின்
அடிமைத்தனம்'. மருத்துவத்தில்
நிகோடின் 'க்ரேவிங்'
என்று கூறுவார்கள் உங்கள் உடலில்
நிக்கோடின் ஒரு அளவு வரை கரைந்து உங்களுக்கு மன நிறைவை தரும் ஆனால் கரைசலின் அடர்த்தி
குறையும் போது 'சிகரெட் குடி
.....சிகரெட் குடி .......' என்று
உங்களைத தூண்டும்.
அப்போது தான் நீங்கள் அடுத்த சிகரெட்டை தேடுவிர்கள்.
புகைத்த பின் உங்களுக்கு திருப்தி உங்களுக்கு திருப்தி அல்ல,
உங்கள் ரத்தத்தில் கலந்துள்ள நிகோடின் சாத்தானுக்குத் திருப்தி! இனி
அடுத்த சிகரெட்
சாத்தான் உங்களிடம் கேட்கும் வரை உங்களுக்கு சிகரெட் பிடிக்க
தோன்றுவதில்லை.
நோய் நாடி நோய் முதல் நாடி அதன்
வாய் நாடி வாய்ப்பக் கொளல்'
எனும் குறளிற்குத் தக்கவாறு நாம் சாத்தானை எதிர்கொள்ள
போகிறோம். நாம் அது நம்முள் மீண்டு எழாதபடி முழு சக்தியும் பிரயோகித்து அதனை
அடக்கி விரட்டப்போகிறோம்.
உங்கள் மனபலம் கொண்டே நீங்கள் நண்பனாய் நினைத்த விரோதியை உங்கள் கையாலேயே அடித்து விரட்டப்போகிறீர்கள்.
குடி சாத்தானே...! இதோ நாங்கள் உன்னை தொலைத்து தலைமுழுக வந்துள்ளோம் அதற்குள்
எத்தனை வேண்டுமானாலும்
குடித்து முடி. நீ மடியப்போகும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது.
END OF PART I
பகுதி - 02.
I Quit Smoking Part 2
இனி... நேற்று உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். பலர் படித்திருப்பீர்கள்.
எனக்குத் தெரியும், இது போதாது
உங்கள் புகைத்தலை நிறுத்த.
நீங்கள் நிச்சயம் நிறுத்துவீர்கள்...நிறுத்தியபின் ஆயாசமாக
மூச்சு விடுவீர்கள். அந்தப் பெருமூச்சில் ஒரு விடுதலை உணர்வு இருக்கும்.
இனி என் கதையையும் மற்றவர் கதைகளையும் கேட்கப் போகிறீர்கள்.
நேற்றைய தினம் எத்தனை பேர் இந்த பழக்கத்தை கை விடுவதாக உறுதி
பூண்டீர்கள்? இருந்தாலும்
விட முடியவில்லை. இன்று காலை எழுந்தவுடன் வாய் நம நம என்கிறது. டாய்லெட் போக முடியவில்லை. காபி குடிக்கையில் கையில்
சிகரெட் கேட்கிறது...
'விட வேண்டும்
என்று தோன்றுகிறது...ஆனால் விட வேண்டாம் என்றும் தோன்றுகிறது. நமக்குத்தான் இதுவரை ஒன்றும்
ஆகவில்லையே.... சிகரெட்
குடிப்பவன் 60 வயதில் தானே
சாகிறான்...எனக்கென்ன வயது 34 தானே?
என்ன வந்துவிடும்? டிமிடித் சொன்னது நல்ல விஷயம்தான்.... கண்டிப்பாக விட்டு விடப்
போகிறேன் அடுத்த வாரம்... அதுவரை டெய்லி ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே தான்
... பிடித்துப் போகிறேன்' ௦
என்று சொல்லும் கனவான்களே....
என் கதையை கேளுங்கள்.......
நானும் உங்களைப் போலத்தான்.... இதே உணர்வுகள் தான்.
மார்ச் 3 , 2003 இரவு
சுமார் 12 :45 .... குவைத்
நாட்டில் என் அறைப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தேன் .... திடீரென்று என்
கனவில் என் தாயார்
எழுப்புகிறார்.. ' டேய்
எழுந்திருடா..எழுந்திருடா' என்று.....
ஊரில் இருக்கும்
என் அம்மா குவைத்தில் வந்து என்னை எழுப்புவதாவது.... கனவாக இருக்கும்.... ஐய்யயோ .... கனவு என்றால்? பலிக்குமோ? என்
அம்மாவிற்கு என்னோ ஆயிற்றோ? எனும்
பதைப்பில் நான் எழுந்து உட்காருகிறேன்.
சுற்றிலும் பார்த்தால் அம்மா இல்லை... ஒ! கனவு அது..... ஆனால்
... இதென்ன நெஞ்சுக்
குழியில் ஒரு வலி? இருக்கலாம்
நேற்றிரவு உண்ட ரவா உப்புமா சரியாக ஜீரணம் ஆகவில்லை போலிருக்கிறது.... அஜீரணம் காரணமாக ஒரு நெஞ்சு
எரிச்சல் வருமே
அதுவாக இருக்கலாம்.....
அனால் இந்த வலி சற்றே வித்தியாசமாய் இருக்கிறதே? என்
நெஞ்சுக் குழியில் யாரோ ஒரு உளி வைத்து பிளந்தால் உண்டாகும் வலி போல இருக்கிறதே? இது போல வலியை நான் என்றுமே உணர்ந்தது இல்லையே? என்
ஒரு கையை வெட்டி எறிந்தாலும் இத்தனை வலி உண்டாகப் போவதில்லை..
அத்தனை வலி. உயிர் போகும் ஒரு வலியை 100 என்று ஒரு அளவீடு எடுத்துப் பார்த்தால் எனக்கு நூறில் தொண்ணூற்றி ஒன்பது பங்கு
வலி.... இதில் நூறு
என்பது உங்கள் மீது ஒரு லாரி மேலே ஏறி அதன் பின்னும் அரை மணி நேரம் உயிரோடு
இருக்கையில் நேரும் மரண வலி... அதுதான் அதிக பட்ச வலி....
நான் படித்தவன் அல்லவா? எனக்குத்தெரியாதா? இந்த
நெஞ்சு வலி மாரடைப்பாக இருக்காது.... ஏனெனில் மார்பு வலி வரும்போது எத்தனை பேர்
சினிமாவில் தங்கள் இடது பக்கம் உள்ள இருதயத்தின் மேல் கை வைத்தபடி அல்லவா
சாகிறார்கள்? சினிமாக்
காரனுக்குத் தெரியாதா? எது மாரடைப்பு
எது அஜீரண வலி என்று? நான் ஒரு
கதாசிரியன், பொறியாளன்
மற்றும் நானும் ஒரு சினிமாக் காரனல்லவா? இது மாரடைப்பு அல்ல.....
சமையல் அறைக்குச் செல்கிறேன்... ஃ பிரிட்ஜின் உள்ளே இரண்டு
லிட்டர் கோக கோலா பாட்டில் இருக்கிறது... நிறைய வாயு அடைத்து.... குடித்தால் உடனே வாயு அடைப்பு வெளியே வந்து
விடுமே.... ஹஹஹா எனக்குத்
தெரியாததா? நான்
படித்தவன் இல்லையா?
குடித்தேன்...! வாயு வெளிவந்தது ஏப்பமாக....! ஆனால் வலி குறைந்த பாடில்லை...
நம்புங்கள்.... முழு
இரண்டு லிட்டர் கோலாவையும் குடித்தும் வலி நின்ற பாடில்லை... அதைவிட முக்கியம்
.... அந்த வலி நெஞ்சில் இருந்து முதுகிற்கு மெல்ல நகர ஆரம்பித்தது.....
வலியின் உக்கிரம் குறையாமல் முதுகில் யாரோ பெரிய கோணி ஊசியால்
ஓங்கிக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்....
என் மனைவியை எழுப்பினேன்... சொன்னேன்....
'ஐயோ...மாரடைப்பாக
இருக்குமோ? உடனே ஆஸ்பிடல்
செல்லலாம்' என்றாள்.
'முட்டாள் வலி
பாரு நெஞ்சுக் கூட்டின் மேலே... இருதயத்தில் இல்லை எனவே இது மாரடைப்பு இல்லை'
என்று அவளுக்குக் கூறினேன்...
சட்டென்று வாந்தி வந்தது...அது வரும் போதே எனக்கு வெளிக்கும்
வந்தது... வலி இன்னும் அப்படியேதான் இருந்தது...
இப்போது மணி இரவு 2 :45 . வலி மெல்ல நகர்ந்து இப்போது என் இடது கையின் தோளுக்கு
வருகிறது... என் மனைவி என் உடலை தொட்டுப் பார்க்கிறாள்.... 'அப்பாடா வியர்க்கவில்லை....ஆகையால் மாரடைப்பாக இருக்காது'
என்கிறாள். அனால் என் உடல் ஜில்லென்று உள்ளே உணர்ந்து கொண்டிருக்கிறேன் (this
is called cold sweat ). குளிர்
பிரதேசங்களில் வியர்வை தண்ணீராய் வெளியில் வராது...ஆனால் உடல் சில்லிடும்....
ஒருவேளை இருக்கலாமோ? எதற்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்று என் மனைவிடம்
சொல்கிறேன் ' எனக்கு கடன்
என்று ஒன்றும் இல்லை.... என் கணக்கில் உள்ள குவைதி தினார் ஒரு ஆயிரத்து
ஐண்ணூறு... ஊரில் NRI பணம் சுமார்
ஒரு லட்சம் இருக்கும்' என்கிறேன்...
'எதற்கு இந்தக்
கணக்கெல்லாம்?' என்கிறாள்! '
ஒரு வேளை எனக்கு ....' முடிக்கும் முன் பலமாக அழத்தொடங்குகிறாள்...
'பாவி
மனுஷா...பணத்துக்காகவா உன்னை நான் கலியாணம் செய்தேன்? ' கதறுகிறாள்...
'இல்லை கீதா
இது ஒரு சாத்தியம் மட்டுமே... என் ATM கார்டு
இதோ இருக்கிறது அதன்
பின் நம்பர் **** ...பணம் எடுத்துக் கொள்.... இதோ வெற்று செக் என் கையெழுத்துடன்...
இதோ வெற்றுத்தாள் கையெழுத்து இடுகிறேன்' என்றெல்லாம் சொல்லும் பொது அவளுக்கு மேலும் அழுகை வருகிறது...
காலையில் தன ஆறாவது வகுப்பின் முதல் தேர்வை எழுதப் போகும் என்
மகனைப் பார்க்கிறேன்....
உறங்கிக் கொண்டிருக்கிறான்.... எழுப்பலாமா? வேண்டாம் உறங்கட்டும்... எனக்குத்தான் ஒன்றுமில்லையே! காலையில்
சரியாகிவிடும்.....
என் மனைவி என்னை நச்சரிக்கிறாள்... 'ஆஸ்பத்திரி போகலாம்' என்று. நான் சொல்கிறேன்... 'காலையில்
பார்க்கலாம், அதுவரை
படுத்துத் தூங்கு' .
நான் வீட்டின் எஜமானன் அல்லவா? எப்போது நான் என் மனைவியின் பேச்சைக் கேட்டிருக்கிறேன்? அவள்
என் பேச்சைக் கேட்டு நடப்பதுதான் பதி பத்தினி தர்மம் அல்லவா?
ஆகவே அவள் அரை மனதோடு நான் சொன்னால் சரியாக இருக்கும்
என்று (கனவான்களே....உங்களில் 99 % மனைவிகள்
இந்த வகுப்பைத்தான் சேர்ந்தவர்கள்.... ஞாபகம் இருக்கட்டும்... அதாவது நீங்கள்
அறிவாளிகள்... அவர்கள்
உங்கள் பேச்சை கேட்டு நடக்கும் ஒரு மனுஷி மட்டுமே...,.)
மணி இப்போது 3 : 45 விடி காலை..... கைகளை மார்பின் குறுக்காக கட்டி கவிழ்ந்தபடி
சோபாவில் படுத்து கிடக்கிறேன்... முடியவில்லை.. புரண்டு படுக்கிறேன் முடியவில்லை... வலி என்னைக் கொல்கிறது.... என்
மனைவியும் படுக்கச்
சென்று விட்டாள்....
மணி ஆறு ஆகும்போது என்னை நான் நம்பாமல், அல்லது என் சினிமா நடிப்புகளை நம்பாமல், முதல் முறையாக பய உணர்வு தோன்றியது......
ஆறு பத்திற்கு என் மனைவியை மீண்டும் எழுப்புகிறேன்.... 'என்னால் முடியவில்லை...வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்!'
அப்போதும் அவள் சொல்கிறாள்... 'வண்டியை நீங்க ஓட்டாதீங்க...சுப்புலதாவின் கணவர் கோபியை
கூப்பிடுகிறேன்'
'வேண்டாம்
ஐந்து கிமீ தானே....நானே ஓட்டிச் செல்கிறேன்....'
என் மிட்ஷுபிஷி கேலன்ட் காரை ஓட்டிக் கொண்டு பக்கத்தில் உள்ள
அல் ராஷித் ஆஸ்பிடலுக்கு
செல்கிறேன்... எமர்ஜென்சி மட்டுமே திறந்திருக்கிறது... ஒரு ரஷ்ய டாக்டரிடம் விவரம் சொல்கிறேன்....
உடனே பட படவென என்னை சோதிக்கிறார்... ஈசீஜி எடுக்கிறார்...
பல்ஸ் பார்க்கிறார்....
டாக்டர் பரபரப்பாகி 'உடனே ஆம்புலன்சை கூப்பிடுங்கள்.... இந்த ஆளுக்கு மேசிவ் ஹார்ட்
அட்டாக்....பல்ஸ் 21 மட்டுமே....இறந்தது கொண்டிருக்கிறான்.....
இன்னும் 10 நிமிடங்களில்
ப்ரைன் ஹெமரேஜ் ஆகி கோமாவிற்குப் போகப் போகிறான்...ஓடுங்கள்
உடனே......ஓடுங்கள்....காப்பாற்ற முடியும் என்று தோன்றவில்லை...நர்ஸ்...ஷாக் ரெடி பண்ணுங்க...
உடனே ஆஸ்ப்ரின்
இன்ஜெக்ஷன் குடுங்க.....'
என் மனைவி மயக்கம் போட்டு விழுகிறாள்... யாரோ அவளை தெளிவிக்கிறார்கள்..... உடனே அவள்
கோபிக்கு போன செய்கிறாள்..
மூன்றாவது நிமிடம் கோபி தன பென்ஸ் காரில் வெளியில் நிற்கிறார்... ...
மணி இப்போது ஏழு...காலையில் பள்ளிக்கூடம்
நிரம்பிய இடத்தில் தான்
குவைத்தின் பிரதான ஆஸ்பத்திரி இருக்கிறது 'முபாரக் ஆஸ்பத்திரி'. என்
மேலாளரின் மனைவி அங்கே டாக்டராக வேலை செய்கிறார்.. அவருக்கு விஷயம் தெரியப் படுத்தப் படுகிறது... உடனே அவர் போன்
மூலம் எமர்ஜென்சி
கதவுகள் திறக்க ஏற்பாடு செய்கிறார்... எனக்காக டாக்டர் சுரேஷ் வெளியே காத்து
நிற்கிறார்... கூடவே அவரின் உதவியாளர்களோடு.... ஒவ்வொரு வினாடியும் முக்கியமாயிற்றே.....
காரில் கோபி எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு வருகிறார்' ஒன்றும் ஆகாது ராஜன்...கடவுள் இருக்கிறார்...விழித்துக் கொண்டிருங்கள்....உறங்காதீர்கள்'....
உலகத்தின் உள்ள எல்லா கார்களும் அன்று காலையில்தான் எங்கள்
வழியில் வந்தது போல
அத்தனை டிராபிக் ஜாம் சாரா அம்மான் சாலையில்... கோபி பிளாட்பாரத்தின் மீதெல்லாம்
ஓட்டுகிறார்....
ஆஸ்பத்திரி வாசலை அடையும்போது டாக்டர் சுரேஷ் மின்னல் வேகத்தில் செயல் பட்டு என்னை சக்கரப்
படுக்கையில் வைத்து தள்ளிக் கொண்டு (அது தவறு...ஓட்டிக் கொண்டு ) போனார்கள்.....
என்னை சோதனை செய்து என்னிடம் என்னவோ கேட்கிறார்.... எனக்கு
அவர் உதடு அசைவது மட்டுமே தெரிகிறது... காது கேட்கவில்லை.....
மெல்ல மெல்ல என் கண்கள் இருள்கின்றது..... என் கடைசிப்
பார்வையில் என் மனைவி அழுது கொண்டு.... கூடவே கோபியும் கண்ணீருடன்......
டாக்டர் சுரேஷ் சொல்வது கடைசியாகக் கேட்கிறது ' டூ லேட் ..... He mssed his thrombolosis for 7.5 hours
since his massive heart attack.... he will go in coma and eventually to brain
haemorage....' ...
என் கண்கள் என்னை அறியாமல் மூடி..... என்ன நடந்தது என்று
தெரியவில்லை....
நான் இறந்திருந்தேன்.
அந்த வினாடிகளில் நான் உயிருடன் இல்லை... மார்பு துடிப்பு
நின்று விட்டது.
எல்லாவற்றிற்கும் காரணம் ..... ஒரே ஒரு காரணம்.......
புகைப் பழக்கம்..... புகை... பகையை விடக் கொடிய புகை.....
பகவைனை நம்பலாம் புகையை நம்பக் கூடாது எனும் புகைப் பழக்கம்.....
என் சொந்தங்களையும், என்னையே நம்பி வந்த மனைவியையும், என் ஜீனை கொண்டிருக்கும் என் மகனையும், என்னைப் பெற்றவர்களையும், என் உடன் பிறப்புகளையும்....இதோ என் முன் அழுது நிற்கும் என் நண்பர்
கோபியைப் போல பலரையும்
.... இவ்வுலகில் விட்டு விட்டு நான் என் கடைசி பயணம் போகப் போகிறேன்....எதற்கு இந்த உலகிற்கு நான் வந்தேன் ? என்ன சாதித்தேன் ?
விட்டு விடுங்கள் சார்...இந்தப் புகைப் பழக்கத்தை..
வேண்டாம்...அது ஒரு துரோகி...!
நன்றி : டிமிடித் பெட்கோவ்ஸ்கி —
பகுதி - 03.
I Quit Smoking ......Part 3
காலையிலிருந்து நான் மகிழ்ச்சி மழையில் நனைந்து
கொண்டிருக்கிறேன்... இந்த தொடர் படித்த நிறைய புகைப்பாளர்கள் குறைந்த பட்சம் நான்
எழுதியதை எதிர்க்காமல்
('நீ என்ன யோக்கியனா'?) ஏற்றுக் கொண்டமைக்கு. அதைவிட மிகச் சிறந்த பணி உங்களில் பலர் விட்டு விட்டதும், பலர் இன்னும் சில மணி நேரத்தில் விட்டு விடப் போவது குறித்தும்...
இந்தப் பகுதியை எதிலிருந்து தொடங்குவது என்று நீண்ட நேரம் யோசித்தேன்....
எதைச் சொன்னால் புகை
பிடிப்பவர்களுக்கு வலிக்கும் என்று எனக்குத் தெரியும்.... ஆகவே வலியைச்
சொல்கிறேன்...
ஒரு சில நாட்கள் கழித்து ஆஸ்பத்திரியிலிருந்து மீண்டு வந்தேன்.... என் வாழக்கை மிகப்
புதியதாக மாறியது....
உணவிற்கு ரேஷன், இனிப்பிற்கு
ரேஷன், குறித்த
நேரத்தில் உறங்க வேண்டும்,
உடல் பயிற்சி, மனப் பயிற்சி என்று பல புதிய விஷயங்களை நான் என் வாழ் நாள்
முழுமைக்குமாய் ஏற்க வேண்டி வந்தது...
ஒவ்வொரு இரவும் எனக்கு March 3 தான்!
அதன் பின் ஆறு முறை அட்டாக் வந்தத் தொலைத்தது... ஒவ்வொரு முறையும் பதறி அடித்து ஆஸ்பத்திரி போய், சரி செய்து கொண்டு வந்து....
என்ன ஒரு மோசமான வாழக்கை? எப்படி தொடங்கினேன் என் சிகரெட்டை? என்
அறை நண்பன் முதல் முதல் என்னிடம் கொடுத்து குடிக்கச் சொல்கிறான். ' சிகரட்
குடிக்கலைன்னா காலேஜ் ஸ்டுடன்ட்ன்னு ஒத்துக்க மாட்டாங்க... பொண்ணுங்களுக்கு தம் அடிக்கிறவனை தான் பிடிக்கும்'
இப்படியெல்லாம் சொல்லி என்னை
உசுப்பேற்றிய என் நண்பன்...
'என்னடா இது? உள்ள இழுத்தியா? அப்பிடியே
நெஞ்சு வரைக்கும் புகையை உள்ளே இழு.... நீ வாயிலியே வெச்சுகிட்டு வெளிய புகையை ஊதுறே.... இப்பிடியா
சிகரட் பிடிப்பாங்க?'
எனக்கு வேப்பிலை அடிக்கப் பட்டது....
முதல் சிகரெட் சேலம் பொறியியல் கல்லூரியில் என் வாயில் பொருத்தப் பட்டு, என் நினைவு தப்பும் போது அந்தக் காட்சி மீண்டும் என் முன் வந்து போனது...
அதன் பின் எத்தனை சிகரெட்டுகள்? எத்தனை பிராண்டுகள் ? வில்ஸ், டபக்,
சார்மினார், ப்ளூ வில்ஸ், ரெட்
வில்ஸ், பின்னர் வெளி
நாடு சென்றதும் ராத்மான்ஸ், கோல்ட் லீப்,
555 , எல்லாம் உள்ளே சென்றிருக்கிறது........
ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகள்...
நான் சம்பாதிக்கிறேன்.... நான் குடிக்கிறேன்.... என்னை யார்
கேட்க?
ஒரு முறை சுஜாதா சாருக்கு ஒரு கட்டு ரோத்மன்ஸ் கொண்டு
தந்தேன்... திருப்பி கொண்டு போகச் சொல்லி விட்டார்...
அப்போது அவர் சொன்னது' இரண்டு முறை இதற்கு நான் விலை கொடுத்துவிட்டேன்' என்று.... அவரல்லாது எத்தனை பேருக்கு நான் வாங்கியும்
கொடுத்திருப்பேன்?
மனது வலிக்கிறது.... பைபாஸ் சர்ஜரிக்குப் பின் நான்கு
வருடங்கள் நெஞ்சைப் பிளந்து பின்னர் கூட்டி மூடியது வலித்துக் கொண்டே இருந்தது...
கீழே உட்கார முடியாது,
குனிய முடியாது, குழந்தையை தூக்க முடியாது, படுக்கையில் ஒருக்களித்தோ இல்லை குப்புறவோ படுக்க முடியாது... கார் ஓட்ட
முடியாது.... டூ
வீலர் மூச்...... தினமும் ப்ளட் சுகர் பார்க்க கையை ஊசியால் குத்த வேண்டும்.....
தினமும் இன்சுலின் (நடுவே சக்கரை வியாதி வந்து விட்டது சுவாசக் கோளாறினால்) காலை மாலை இரு வேளையும்...
நான் எதற்காக இன்னும் வாழ வேண்டும் எனும் கேள்வி என்னுள் எப்போதும்
எழுந்துகொண்டே இருக்கும்.....
இத்தனை வேதனைகளின் மூல காரணம் புகைப் பழக்கம் அல்லவா..?
நான் வாழ வேண்டிய காரணம் இருக்கிறது.... என்னைப் போற்றும் என் மனைவிக்காகவும்,
என்னையே குருவாகக் கொள்ளும் என்
மகனுக்காகவும், என்னிடம் எதையுமே
எதிர்பார்க்காத என் வயதான தாய் தகப்பனுக்காகவும் நான் வாழ வேண்டும்...
அது போலவே நீங்களும்....வாழ வேண்டும்.... உங்களுக்காக இல்லையெனினும்,
உங்களின் மனைவிக்காக... உங்கள் மகன்
மகளுக்காக.... நீங்கள் கைபிடித்து அழைத்து சென்ற தம்பி தங்கைகளுக்காக... தங்கள்
வியர்வையையும் இரத்தத்தையும்
உங்களுக்காக சிந்திய கடவுளுக்கும் மேலான உங்களின் தாய் தந்தைக்காக..... நீங்கள் நிச்சயம் இந்த உலகில் ஆரோக்கியத்தோடு
வாழ வேண்டும்....
கடவுள் நமக்குக் கொடுத்துள்ள இந்த உடல் கடவுளுக்கே சொந்தம்....
அதை மாற்றவோ, அழிக்கவோ
அல்லது அதை மாசு படுத்தவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை...... எனவே உங்கள் உடலையும் இருதயத்தையும்
சுத்தமாக வையுங்கள்....
அதில் குப்பைகளும் புகை மூட்டங்களும் அண்டாமல் இருக்கட்டும்...
இனி...!
உங்களுக்கான பிரத்தயேகக் காட்சி இதோ ஆரம்பம்...
சிகரெட் குடிப்பதினால் வரும் வியாதிகளை பட்டியல் இட்டுத்
தந்திருக்கிறேன்...
Read below and leave right now in the habit of
smoking.
• Blood vessels: The Smoking increases blood
pressure, narrows blood vessels and increases the cholesterol is deposited on
their inner walls, hindering the proper circulation.
புகை பிடிப்பதினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது... இரத்த நாளத்தின் வழிகள்
அடைக்கப்படுகிறது.... கொழுப்பு சத்து துகள்கள் வழிகளை அடிக்கின்றன...மேலும் கொழுப்பு
சத்து நிகொடினுடன்
கலந்து இரத்தக் குழாயின் உட்புறம் அடைத்துக் கொள்கிறது... பின்னர் ஒரு நாள் இரத்தம் போவதை சுத்தமாக நிறுத்தும் போது தான்
நான் சொன்ன மாரடைப்பு
வருகிறது.....
• Lungs: many chemicals inhaled when smoking a
cigarette and are considered the main carcinogens. Another component such as
tar, excluding the 30 percent that is exhaled, is retained in millions of
microscopic droplets that enter cells and hinder the breathing mechanism and
its role in cleansing the body. Smokers are agitated, often running out of
breath and prone to suffer from emphysema.
சிகரெட் புகையில் உள்ள பல ரசாயனப் பொருள்கள்தாம் புற்று
நோய்க்கான மூல காரணம் என்று கண்டு அறியப்பட்டுள்ளது. புகையில் உள்ள மற்றொரு
பொருள், 'தார்'.
மிகப்பெரும் விஷப் பொருள்.... உங்கள்
ஊரில் என்றாவது
தார் சாலை போடும் போது செருப்பு கால் வைத்து நடந்துள்ளீர்களா? காலில் ஒட்டும் தார், உங்கள் செருப்பை விட்டுப் பிரிக்க எத்தனை பிரயத்தனப் பட்டிருப்பீர்கள்....
ஆனால் இந்த தார் உங்களின் நுரையீரலின் மேல் ஒட்டிக்கொண்டு
கழுவவே முடியாமல்... கறுத்து, துளைகளை
அடைத்து, எப்போதுமே நீக்க முடியாத
ஒரு எச்செல் கரை... தார்.... அதுதான் புகையின் முதல் மூலக் கூறு.... ஒவ்வொரு முறை புகைக்கையிலும் தார் ஒரு கோட்டிங்
கொடுக்கிறது...
சுவாசிக்க முடியாமல் இருக்கையில் ஆண்டவா? .... பிராண வாயுவிற்க்காக நான் கதறும் போதெல்லாம் உன்னையல்லவா நான்
நிந்தித்திருந்தேன்..?
• Heart: Another of the implications smoking is
that nicotine is responsible for increasing heart rate, blood pressure,
produces adrenaline and increases fat deposits.
இதை நான் கூறவும் வேண்டுமா? புகை
பிடிக்கும்போது வரும் 'எக்சைட்
மென்ட்' உங்கள் நாடித் துடிப்பை
அதிகரித்து.... மாரடைப்பிற்கு வழி கோலுகிறது.... கூடவே கொலஸ்ட்ரால் அதிகமாக ஒட்டிக் கொள்ள வழி வகையும் செய்கிறது...
• Blood: red blood cells absorb carbon monoxide
from cigarette smoke thereby decreasing its ability to absorb oxygen to
oxygenate the entire body.
நான் நேற்று சொன்ன சிவப்பணுக்கள், ஞாபகம் இருக்கிறதா? ரத்தத்தில் உங்களின் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்லும் கடவுளின்
தூதுவன்..... அந்த
தூதுவன் உங்கள் திசுக்களை புதுப்பிக்க கொண்டு செல்லும் பிராண வாயுவை வழியில்
தடுத்து தான் உண்கிறது நம் சிகரெட்டில் உள்ள நிகோடினும் ஒற்றை அணு கரியமில
வாயுவும்...
இதனால் உங்கள் திசுக்கள் புதுப்பிக்கப் படாமல் உங்களுக்கு வயோதிகத்தன்மை ஏற்படுகிறது...தோல் சுருங்குகிறது....
கை கால்
மூட்டுகளில் வலி....சொல்லிக் கொண்டே போகலாம்...
• Muscles: thanks to the cigarette they lose
strength, endurance and tone by poor blood supply.
தசைகள் வலு இழக்கின்றன... மூச்சு வாங்குகிறது.... தசைகள்
தங்கள் வாழ் நாள் முடிந்து விட்டதாகக் கருதுகின்றன... அது மென் மேலும்
உங்களுக்கு வலியையும் வேதனையையுமே தருகிறது.... இரத்த ஓட்டம் குறையும் போது தசை
வளர்ச்சி குறைந்து
வேதனை அதிகரிக்கிறது....
• Brain: nicotine reaches the brain only a few
seconds after giving the first puff. The effects on the nervous system are
complex, but among the best known are the stimulation, irritation, relaxation,
depression and memory enhancement.
நினைவில் கொள்ளுங்கள்.... நீங்கள் சுவாசிக்கும் முதல்
சிகரெட்டின் முதல் இழுப்பிலேயே நிகோடின் மூளைக்கு சென்று சேர்கிறது.... மூளையின்
நரம்பு மண்டலம்
மற்றும் நாளங்களின் செயல் பாடுகள் மிகவும் கடினமானவை.... மனிதனால் அறிய முடியாத
இறைவனின் ஆலயம்.... அங்கே சென்று சாத்தானைப் போல அல்லது அழையா விருந்தாளியாய்
ஒரு புயலைப் போல் அழித்துத் தாண்டவம் ஆடுகிறது... உங்களுக்கு தூண்டுதல், அமைதிப் படுத்தல், தாழு
மனப்பான்மை மற்றும் ஞாபக மாற்றங்கள் உண்டாக்கி அலைக்கழிக்கும்...
• Stomach: smoking increases the amount of stomach
acid, resulting in ulcers.
வயிற்றில் அதிகப் படியான அமிலம் உண்டாகி உங்களுக்கு குடல் புண்
வந்து தீராத
வாயிற்று வலியை உண்டாக்குகிறது.... தீராத வயிற்றுப் புண்தான் 'புற்று நோய்க்கு' வழி
வகுக்கிறது..... தீராத வலி - புற்று நோய் வலி...
• mouth, larynx, pharynx and throat, the substances
contained in cigarettes irritate the lining of the mouth, increasing the risk
of cancer in that area as well as in the larynx and pharynx.
வாய்ப் புறங்களின் மேற்பரப்பில் எரிச்சலையும் புன்னையும்
உண்டாக்கி உங்களுக்கு
புற்று நோய் வருவதற்கான வழியை திறந்து 'வெல்கம் டு தி குருப் ஆப் புற்று நோய் காரர்கள்' என்று உங்களிடம் சொல்லி மகிழும்.....
• Miscellaneous: In addition to all damages
mentioned, smoking causes decreased sex drive, produces dryness, discoloration
and wrinkles.
இதுவல்லாது.... மனிதனிடமும் மிருகத்திடமும் பாரம்பரிய குணமாக
ஜீனில் எழுதப்
பட்ட காம இச்சை குறைகிறது... வாழ்க்கையில் எத்தனை பணம் இருந்து என்ன? காமம் இல்லா கலவு வாழ்க்கை வாழ்த்து என்ன பிரயோஜனம்?
சாமியார்களே விரும்பும் ஒரு வாழ்க்கை காம வாழ்க்கை.... அது
இல்லாது வேறு என்ன
வாழக்கை இனிக்கும்.... நீங்கள் மட்டும் இல்லாது உங்கள் பங்குதாரரையும் ஏமாற்றுகிறீர்கள்....
பாவம் கொடூரன்.....you....
உங்களுக்கு வயோதிகத்தில் வரும் அத்தனை களைப்பும் தோல் சுருக்கங்களும்
முப்பத்தி ஐந்து வயதிலேயே
வந்து வாழ்தலின் நியாயத்தை மறுக்கிறீர்கள்......
சரி .... சிகரெட் புகைப்பதால் நன்மையே இல்லையா?
யார் சொன்னார் இல்லை என்று? ஒன்றல்ல ..... மூன்று....
ஒன்று... உங்களை நாய் கடிப்பதில்லை
இரண்டு - உங்கள் வீட்டிற்கு திருடன் வருவதில்லை
மூன்று. உங்களிடம் எல்லோரும் மரியாதையுடன் பழகுவார்கள்....
எப்படி?
புகைப்பவன் சீக்கிரமே கிழவனாவதால் கையில் தடியுடன் கூனிக்
கொண்டுதான் நடக்க
முடியும்...கையில் தடி இருக்கையில் நாய் அருகில் வருமா என்ன?
புகைப்பவன் இரவில் உறங்குவதில்லை... உறங்க முடியாமல் இருமிக்
கொண்டே இருப்பான்....
திருடனுக்கு தெரியும் உங்கள் வீட்டில் யாரோ எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று., எனவே உங்கள் வீட்டிற்குள் திருட வருவதில்லை.
புகைப்பவனை சுற்றிலும் ஒரு துற நாற்றம் இருந்துகொண்டே இருக்கும்...
பின்னே உங்களுடன் தள்ளி நின்று பழகாமல் கிட்ட வந்து முத்தமா கொடுப்பார்கள்?
போகட்டும்.... நான் உங்களை இனி பயப் படுத்தப் போவதில்லை....
சில நல்ல விஷயங்களையும் சில வழி முறைகளையும் சொல்லுகிறேன்....
இதைக் கேட்கும்போது உங்களுக்கு ஒரு விடிவு பிறந்ததாகத்
தோன்றும்.... அது தான் என் நோக்கமும் கூட...
அது என்ன?
'டிமி...
எனக்கு எல்லாம் புரிந்து விட்டது... நான் இத்தனை நாள் தப்பு செய்திருக்கிறேன்.... இந்த நிமிடம் அந்த சைத்தானை
விட்டுவிட்டேன்....
ஆனால்...?'.... இழுக்கிறீர்கள்....
'என்ன ஆனால்?...
சொல்லுங்கள் ' என்கிறேன் நான்...
' இத்தனை நாள்
நான் குடித்த சிகரெட்டினால் எனக்கு பாதிப்பு வராதா' என்று கேட்கிறீர்கள்........
இங்கே நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்... தன்னை
நினைத்து சரணாகதம்
அடைந்த எந்த ஒரு பக்தனையும் கடவுள் கை விடுவதில்லை.....
எழுதிக் கொள்ளுங்கள்....
நீங்கள் இன்றுடன் புகைத்தலை நிறுத்திவிட்டால் கடவுள் உங்களை
ஒருமுறை... ஒரேமுறை மட்டுமே உங்களை மன்னிப்பார்.....
மீண்டும் அந்த குழிக்குள் விழுந்தால் தலையே போனாலும் உங்களை
காப்பாற்ற மாட்டார்.....
சரி... நீங்கள் மீண்டும் அந்தக் குழியில் விழப் போவதில்லை
என்று நான் நிச்சயம் நம்புகிறேன்....
இதோ கடவுளின் கருணைக் கொடையான உங்கள் உடல் நிலைக்கான
ட்ரீட்மென்ட்....
இன்றுடன் சிகரெட்டை விட்டு விட்டால்...எப்படி உங்கள் உடல் அதை
ஏற்றுக் கொண்டு
மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்பது பற்றி பட்டியல் இட்டிருக்கிறேன் ....
- இன்று
சிகரெட்டை விட்டவருக்கு இன்றிரவு சுகமான நிகோடின் ஃப்ரீ தூக்கம் உறுதி.
- நாளை காலை
எழுத்தவுடன் பல் துலக்கையில் உங்களிடம் நிரந்தரமாக இருந்த சிகரெட் மணம் மிஸ்ஸிங்
- நாளை மதிய
உணவில் தயிருக்கு புது மணம் புது சுவை
- நாளை மறுநாள்
உங்களுக்கு நல்ல உறக்கம் ஏற்பட்டு மிகவும் உற்சாகமான தினம்
- ஒரு
வாரத்திற்குள் அனைத்து உணவிற்கும் உள்ள புதிய ருசியை அறிவீர்கள். உங்களின் ருசி
அறியும் பட்ஸ் புதியதாக பிறக்கிறது.
- இரண்டு
வாரத்திற்குள் உங்கள் தாம்பத்திய உறவில் நேரம் நீள்கிறது.
- ஒரு
மாதத்திற்குள் உங்கள் சுவாசம் சரியாகிறது... குறட்டை பழக்கம் அறவே 15 நாட்களில் போகிறது
- தீராத
வயிற்றுவலி நிற்கிறது.
- ஒற்றைத்தலைவலி
மாயமாக மறைகிறது
- ஒரு
வருடத்திற்குள் உங்களின் முகச் சுருக்கங்கள் நீங்கி நீங்கள் பேர் அண்ட் லவ்லி
விளம்பர நாயகனாகிறீ ர்கள்..
- இரண்டு வருடத்திற்குள்
நீங்கள் இளமையாய் தெரிகிறீர்கள் அனைவரும் சொல்கிறார்கள் நீங்கள் பொலிவுடன்
இருப்பதாக...
- ஏழு
வருடத்திற்குள் உங்களின் நுரையீரல் முழுமையாக சுத்தமாகி ஒரு புதிய நுரையீரல் செயல்
படத்துவங்குகிறது.....
நாம் ஏன் புகைப்பதை நிறுத்தக் கூடாது? நமக்காக இல்லாவிட்டாலும் நம்மை சுற்றிலும் நம்மை நம்பியும்
உள்ள அனைவருக்காகவும்....
- புகை பிடித்து
புற்று நோய் வந்த சிலரின் படங்களை (இமேஜ்) லிங்கில் கொடுத்துள்ளேன்.... முழுமையாகப் பார்க்கவும்... உங்களின் மனோ
திடத்திற்கு இது
மிகவும் உதவும்.....
http://www.facebook.com/media/set/?set=a.3805432172863.2145550.1189147726&type=3
http://www.facebook.com/media/set/?set=a.3805410892331.2145548.1189147726&type=3
உங்களின் புகைப் படம் இதில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது
உங்கள் பொறுப்பு......
இனியும் கதை முடியவில்லை.... நாளைக்கு பாக்கி
வைத்திருக்கிறேன்...... இமேஜ் தெரபியின் முக்கிய அம்சம்....
தயாராகுங்கள்...!
நன்றி : டிமிடித் பெட்கோவ்ஸ்கி
இறுதிப் பகுதி - 04.
I Quit Smoking Part 4 - the last
part...............Do or Die!
என் கடைசி ஆயுதம்........ என்னிடம் இதற்கு மேல் எந்த ஆயுதமும்
இல்லை.... கெடுதிகளை
எடுத்துச் சொல்லிவிட்டேன்.... போருக்கு நீங்கள் தயாராக இல்லை.... புகையை விட
மறுக்கிறீகள்.... பார்க்கலாம் உங்களுக்காயிற்று எனக்காயிற்று.... நான் இன்று ஜெயித்து விட்டுத்தான்
போவேன்...உங்களை நான் புகை பழக்கத்திலிருந்து விடு படுத்தி விட்டுத்தான் போவேன்...
என் உறுதி இது....
உங்களை நான் போரில் சவால் இடவில்லை.... யாசிக்கிறேன்... உங்களின் கால்களில்
விழுந்து கேட்கிறேன்...மூன்று நாட்களாகச் சொன்னதைக் கேட்காமல் மீண்டும்
மீண்டும் புகையை நாடுகிறீர்கள்.
நான் யாரோ...நீங்கள் யாரோ இல்லை... எனக்கு ஒன்று வந்தால் நீங்கள் வருத்தப் படப் போகிறீர்கள்....உங்களுக்கு
ஒன்று வந்தால் நான் வருத்தப் படப் போகிறேன்.....பின் எப்படி நீங்களும் நானும் வேறு வேறாக
முடியும்..... இந்த கடைசி அத்தியாயத்தை மிகவும் கவனமுடன் படியுங்கள்....கடைசி வரி
வரை படியுங்கள்...
மீண்டும் மீண்டும் படியுங்கள்...... ஆண்டவன் உங்களுக்கு எந்த
அழிவோ நஷ்டமோ இல்லாமல்
கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பு.
சொல்ல வந்ததை சொல்லி விட்டேன் மூன்று பாகங்களாக...
இனி தெரபிக்கு வருவோம்.....அதற்கு முன் ஒரு
வார்த்தை....நீங்கள் சிகரெட் விடும்போது மிகக் கடினமான முதல் தினம் உங்களை மீண்டும் குடிக்கச்
சொல்லி 'நிகோடின்'
மிகவும் துன்புறுத்தும்....ஏனெனில்
ரத்தத்தில் அதன் அடர்த்தி குறையும் போது 'வேண்டும்
வேண்டும்'.....'குடி ...குடி'
என்று உங்களை வற்புறுத்தும். அந்த நேரத்தில் அதற்கு சோறு போட்டால் உடனே
அடங்கி விடும்.
நிகோடின் வற்புறுத்தினால் சிகரெட் தான் குடிக்க வேண்டுமா?
மாற்று இல்லையா..?
இருக்கிறது..... மாற்று மருந்து இருக்கிறது..... அதன் பெயர் 'நிகோரெட்' சூயிங்
கம். மருந்து கடைகளில் கிடைக்கிறது. ( நண்பர் இளமை இந்திரா சொன்னார், 'நிகோரெட்'
வாங்க மருத்துவரின் பிரிஸ்க்ரிப்ஷன்
தேவை என்று. உங்கள்
அருகாமையிலிருக்கும் மருத்தவரிடம் வெளிப்படையாக சொல்லுங்கள்...அவர்கள் புரிந்து கொள்வார்கள்...)
கையில் நிகோரெட் வைத்துக் கொள்ளுங்கள்... புகைக்க வேண்டும் என்று
தோன்றும்போதெல்லாம் ஒரு சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள்...அதில் உள்ள நிகோடின்
உங்களுக்கு போதுமானது....ஒரு
ஸ்ட்ரிப் இருபத்தி நாலு மணி நேரத்திற்குப் போதுமானது....
இருபத்தி நாலு மணி நேரம் கடந்தால் நீங்கள் சுதந்திர
மனிதன்....... புகை உங்களை இனி அண்டப் போவதில்லை.....உறுதி..
எனக்கு இன்னொரு ஜென்மம் உண்டென்றால் எனக்கு அதே தாயும் அதே
தந்தையும் அதே மனைவியும்
அதே பிள்ளைகளுமே வேண்டும்.... என் வாழ்க்கையின் நீட்சியை நான் பல ஜென்மங்களுக்கும்
கடத்த விரும்புகிறேன்...அது போலவே நீங்களும் இல்லையா?
இமேஜ் தெரபிக்கு போகும் முன் உங்களை உருவாக்கிய இருவரை நான்
உங்களுக்கே அறிமுகப்
படுத்தப் போகிறேன்.... ஒற்று உங்கள் தாய்...மற்றவர் உங்கள் தந்தை.....
'அம்மா'....
அந்த ஒலி ......ஒவ்வொரு உயிர்க்கும் ஆன்மாவிலிருந்து வரும் ஒரே ஒலி.... தாயை கன்றும்,
பிள்ளையை தாயும், மோப்பத்தின்
மூலம் கூட அடையாளம் சொல்லிவைத்த கடவுள் செய்த உறவு... தொப்புள் கொடி உறவு மனிதனுக்கு என்றாலும் அது இல்லாத விலங்கினங்களும் உணரும் ஒரே
ஒரு பிரபஞ்ச சொல் 'அம்மா'
ஒவ்வொருவராக நினையுங்கள்.... முதலில் உங்கள் தாய்.... தெய்வம் அனுப்பிய
தூதுவர்... உங்களை
பத்து மாதம் சுமந்தவள்... கருவில் உருவாகி இன்று வரை உங்கள் கெட்ட பழக்கம்
தெரிந்து மனதில் அடிபட்டாலும், அதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல் 'என்
பையன் நான் சொன்னா கேட்பான்' எனும்
ஒரு எளிமையான அன்பு உருவை நீங்கள் புகைப் பழக்கத்தால் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்....
நீங்கள் அப்பாவிடம் பணம் கேட்கத் தயங்கியபோது, யாருக்கோ சேர்த்து வைத்த பணத்தையோ, இல்லை கோவில் உண்டியலுக்குப் போட்டு வைத்த பணத்தையோ எடுத்து
உங்கள் கையில் கொடுத்து
'அதை அப்புறம் பார்த்துக்கலாம்
ராசா....போயி பணம் கட்டுப்பா' என்றவளைத்தான்
நீங்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்...
பிறந்தபோது உச்சி முகர்ந்து, நீங்கள் கருப்பாக இருந்தாலும் சிகப்பாக இருந்தாலும் எந்தக் கவலையும், படாமல் உங்களையே ஒரு உலகம் என்று நம்பியவள் ... நீங்கள் உதைத்த கால்களை முத்தமிட்டவள்.... நீங்கள் ஒண்ணுக்கும் வெளிக்கும்
போனபோது அசிங்கம் பார்க்காமல் கழுவியவள்.....நீங்கள் சிரித்தபோது 'கன்னத்தில்
குழி பாரு' என்று
இரசித்து மகிழ்ந்தவள், ஒரு போதும் உங்களை
அடுத்தவரிடத்தில் எடுக்கக் கொடுக்காதவள்.... தவழ்கையில் நீங்கள் தடுமாறி விழுந்தபோது உங்களை ஓடிச் சென்று எடுத்து
அழுதவள்.....
பதிலுக்கு நீங்கள் செய்த உபகாரம்..... அவள் தந்த சதையையும்
இரத்தத்தையும் அசுத்தமாக்கி,
கோவிலாக இருக்க வேண்டிய உங்கள் உடலை
புகையால் மாசு படுத்தி வாயில் நுழையாத வியாதிகளைஎல்லாம் உள்ளே ஒளித்து
வைத்துள்ளீர்கள்.... இது நியாயமா? உங்களுக்கு
ஒரு வலி வேதனை என்றால் அவள் பொறுப்பாளா? யோசித்தீர்களா இதை முன்னமே?
அடுத்து உங்கள் தந்தை..... மிரட்டி உருட்டி அடித்து
உங்களை பணிய வைத்த அப்பனைத்தான் நீங்கள் அறிவீர்கள் ... ஆனால் அதன் பின்புறம்
கண்ணீர் மல்க முகம் மறைத்து அழும் அன்பை என்றேனும் கண்டதுண்டா? நீங்கள் இன்று வளர்ந்து ஆளாகி நிற்கையில் பழைய கம்பீரம்
குறைந்து, உங்களின் முகம்
நோக்கிப் பேசவும் பயப்படும் அப்பன்... மகன் சுடு சொல் சொல்வானோ என்று
பயப்படும் அப்பன்...
ஆனால் அன்றைக்கு? உங்களின்
பிஞ்சுக் கைகளை
பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்தில் சேர்த்தி, நேரம் தவறாமல் உங்களை வீட்டிற்கு அழைத்து சென்ற அப்பன்.... எந்த ஒரு பண்டிகையையும்
விட்டுக் கொடுக்காமல்
உங்களுக்கு புது சட்டை துணி எடுத்துத் தந்த அப்பன்.... என்றைக்கும் நம் அப்பன்கள் தங்களிடம் காசு இல்லை என்பதை
சொன்னதில்லை.... எதை
விறகிராரோ, எவன் காலில்
விழுந்து தன தன்மானம் தொலைத்து உங்கள் கல்லூரிக்கான பணம் அடைத்தார் என்றேனும் நீங்கள் கவலை
பட்டதுண்டா?
இன்றைக்கு நீங்கள் வளர்ந்து, ஒரு வேலைக்குச் சேர்ந்து, பின்னர் சம்பாதித்து, உங்கள்
பணம் இது, என்ன
வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம், எப்படி
வேண்டுமானாலும் செலவு செய்து அழிக்கலாம், குடிக்கலாம், புகை பிடிக்கலாம்....
காரணம் இது உங்கள் பணம்.... நீங்கள் சம்பாதிக்கும் பணம்....
ஆனால் உங்களின் எலும்புகளும், நரம்புகளும் எலும்பின் உள்ளே உள்ள மஜ்ஜையும் தந்தது உங்கள் தகப்பன்.... எந்த வளர்ந்த
மகனின் முன் இப்போது
தலைகுனித்து பேசுகிறானோ அந்த தகப்பன்.... உங்களுக்கு அதை மாசுபடுத்த என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் தந்த இந்த உயிரும் உடலும் அடுத்த தலைமுறைக்குப் போய் சேரவேண்டும் என்றுதான் உங்களுக்கு
உயிர் கொடுத்தார்கள்
உங்கள் தாய் தந்தையர்...
உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது அதை அழிக்க? உங்களை தட்டிக் கேட்க யாரும் இல்லை எனும் மமதையும் ஆணவமும்
அல்லவா?
இதோ நான் இருக்கிறேன்...உங்களை தட்டிக் கேட்க.... ஏனெனில்
அவர்களால் கேட்க முடியாதபடி
நீங்கள் தான் உயர்ந்த நிலையில் இருக்கிறீர்களே?
ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் அவர்களின் இறப்பை.... அவர்கள்
இறந்தால் நீங்கள் சந்தோஷப் படுவீர்களா? உங்கள் தாயின் காலில் அடிபட்டால் விட்டு விடுவீர்களா? உங்கள் தந்தைக்கு பாரிச வாயு வந்தால் சிரிப்பீர்களா?
அது போலத்தானே அவர்களுக்கும்! தாங்கள் பெற்ற மகன் நோய்
மிகுதியாலும் வலியாலும் துடிக்கையில் உங்களுக்கு நேரும் அதே வலியும் அழுகையும்தானே அவர்களுக்கும்....
கேவலம் ஒரு சிகரெட்டா இத்தனைக்கும் காரணம்? விட முடியாதா அதை? விட்டு
விடுங்களேன்.... ப்ளீஸ்......
இனி இமேஜ் தெரபிக்கு வருவோம்..... உறுதி கொடுங்கள்.....எந்த
காரணம் கொண்டும்
நீங்கள் கண் கலங்கக் கூடாது.... எந்த காரணம் கொண்டும் நீங்கள் அழக்கூடாது...ஆண்
என்பவன் அழுதால் கோழை... உங்களைப் போல.... ஆனால் நீங்கள் பாசம் காரணமாக அழக்கூடாது....
இனி நான் உங்களுக்கு ஒரு காட்சியை விவரிக்கப் போகிறேன்....படித்துக் கொண்டு
வாருங்கள்....படிக்கும் போது அந்த காட்சி உங்கள் மனக்கண் முன் ஒரு சினிமா போல
வரட்டும்....நீங்கள்தான் கதா நாயகன்...அதில் மாற்றமில்லை...ஒவ்வொரு வரியையும் காட்சியாய் மாற்றுங்கள்.....இதுதான்
என் கடைசி ஆயுதம்....இந்த ஆயுதத்திற்கு நீகள் விழவில்லை என்றால் நானும் தோற்பேன்....அதை விட வருத்தம்
நீங்கள் தோற்பது தான்....
நாம் இருவருமே தோற்கக் கூடாது நண்பா!
நீங்கள் தோற்கக் கூடாது.....மூன்று நாட்களாய் உங்களை நான் கட்டிப் போட்டு
உங்கள் மனத்தை என் வசம் திருப்பி வைத்திருக்கிறேன்..... ஆக.... நீங்கள் தோற்கக் கூடாது...அதற்காக
என்ன வேண்டுமானாலும் செய்வேன்...என்ன வேண்டுமானாலும்.... உங்களை கெஞ்சுவேன்...உங்களைக் கொஞ்சுவேன்.... உங்களின் காலைப் பிடிப்பேன்....
உங்களைத் திட்டுவேன்... உங்களிடம் மரியாதைக் குறைவாக நடப்பேன்...என் சுதந்திரத்தை உங்கள் மீது செலுத்தி உங்களை ஆக்ரமிப்பேன்.......
என்ன நடந்தாலும் நீங்கள் இதை படிப்பதை நிறுத்தக் கூடாது....
எனக்கு வாக்குறுதி கொடுங்கள்....இந்த எழுத்துக்களை கடைசி வரை
படிப்பேன் என்று......
இனி இமேஜ் தெரபிக்கு வருகிறேன்.......
இனியும் நீங்கள் புகைப்பதை நிறுத்தவில்லை என்றால் காலையில்
நான் இட்ட புகைப்படத்தில்
உள்ள ஏதாவது ஒரு பாகம் புற்று நோய் வாய்ப்படும் என்பது உறுதி......
ஆகையால் நீங்க இறப்பது உறுதி.....
எங்கே கற்பனை செய்யுங்கள்....இந்த சினிமா உங்கள் மனத்திரையில்
ஓடட்டும்.....
நீங்கள் இறந்து விட்டீர்கள்.....உங்கள் உடல் உங்கள் வீட்டில்
நடுக் கூடத்தில்
கிடத்தப் பட்டிருக்கிறது.... உங்கள் உடல் மேல் மாலை போடப் பட்டிருக்கிறது.... உங்கள் உடலைச் சுற்றிலும் உங்கள் சொந்தக்
காரர்களின் அழுகைக்
குரல்கள்.... நீங்கள் உயிருடன் இல்லை... வெளியில் இருந்து ஆன்மாவாக மட்டுமே
உங்களால் பார்க்க முடிகிறது...உங்களின் முன் கதவில் நின்று பார்க்கிறீர்கள் அரூபமாக...
அதோ அந்த ஓரத்தில் உங்கள் மனைவி....கண்களில் கண்ணீர் வராமல் விட்டத்தைப்
பார்த்தபடி....என்ன தீங்கு செய்தாள் அவள் உங்களுக்கு? உங்களையே நம்பி உங்களுக்கு கழுத்தை நீட்டியதை விட என்ன
பாவம் செய்துவிட்டாள்? உங்கள்
குழந்தைகளை சுமக்கவில்லையா? உங்களுக்கு
நோய் வந்தபோது அவள் உறங்காமல் உங்கள் அருகில் இருந்து பணிவிடை செய்யவில்லையா?
உங்கள் மல ஜல வாந்திகளை அவள்
துடைக்கவில்லையா? பதிலுக்கு நீங்கள் என்ன
செய்தீர்கள்......
தீய பழக்கத்திற்கு .... உங்களின் சொந்த இன்பத்திற்காக அவளின் வாழ்க்கையை பாழாக்கிய துரோகி
அல்லவா நீங்கள்? உங்கள் உயிர்
போய் விட்டது... அவளுக்கு யார் இனி கதி? அவள் அண்ணனா? அவள் அப்பாவா?
அவள் சகோதரியா? அதுவும் எத்தனை நாள்? நீயென்ன பணக்காரன் பெத்த பிள்ளையா? அவளுக்கு
சொத்து சுகம் சேர்த்து வைத்திருக்கிறாயா? மானம் கெட்டவனே! செத்துப் போய்விட்டாய் இப்போது....
தனியாக அவளுக்கு பஸ் ஏறி போகத்தெரியுமா? நீ இல்லாது எங்காவது போயிருக்கிறாளா? அது போகட்டும்....யோசித்துப் பாருடா முட்டாள் நாயே.... நீயில்லாத
இந்த உலகத்தில்
அவளை யாராவது நிம்மதியாக வாழ விட்டு விடுவார்களா? எத்தனை கழுகுகள் இது போல சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கிறது.....
உனக்கென்ன நீ செத்துப்
போய்விட்டாய்.... இதோ உன் விதவை மனைவியை ஓரக்கண்ணால் ரசிக்கும் அடுத்த
வீட்டுக்காரனும், அலுவலகத்தில்
அவளின் இளமையையும் விதவைத்தனத்தையும் பயன் படுத்தத் துடிக்கும் அவளுடன் வேலை செய்யும் ஆந்தைகள்
மத்தியில் இனி எப்படி
அவளால் காலம் தள்ள முடியும்?
நீ உயிருடன் இருந்திருந்தால் இது நடக்குமாடா முட்டாளே...? கட்டிய பெண்ணை அடுத்தவன் பார்த்தாலே பொங்கிய நீ,,, உயிரோடு இல்லாதபோது நடப்பதை எப்படி தடுப்பாய்? மூடனே....
யோசித்துப் பார்..... நீ உயிருடன் இருந்திருந்தால் ஒரே ஒரு
நொடி..... அது போதும்
நீ கத்தியெடுத்து அந்த நீசர்களை விரட்ட..... நீதான் உயிருடன்
இல்லையே....
எத்தனை நாள்தான் அவளும் இந்த சமூக அவலங்களுக்கிடையில் வாழ்வாள்?
ஒரு நாள் அவளும் அடி பணிந்து விட்டால்?
முட்டாளே சொல்கிறேன் கேள்...
துபாயில் இருக்கும் அத்தனை இந்திய வேசிகளும் விதவைகள்.... தெரிந்து கொள்.... வாழ
வழியின்றி உள்ளூரில் மானம் போகும் என்று பிழைப்பு நடத்த பரதேசம் வந்த விபச்சாரிகள் ...... உன் மனைவியும் அதில்
ஒருத்தி.... உன் மகளும்
அதில் ஒருத்தி.... உன்னால் என்ன செய்ய முடியும்? நீதான் விட முடியாது என்று ஒற்றைக் காலில் நின்று சாகும் வரை சிகரெட்
குடித்து தொலைத்தாயே!
ஒரு நொடி யோசித்திருப்பாயா? அந்த
சாத்தான் புகையை விட்டிருந்தால்
உன் மனைவிக்கு இந்த துன்பம் நேர்ந்திருக்காது என்று?
தூ! நாயே.... உன் ஒருவனால் உன் மனைவியின் மானம் கெட்டு,
உன் குடும்ப மரியாதை கேட்டு.... பார் வெளியே ... உன்னை தூற்றிக் கொண்டு
இருக்கும் ஒரு கும்பலை...
இது தான் நீ கேட்டு வந்த வரமாடா? வெட்கமில்லை
உனக்கு?
அப்படி என்னடா இருக்கு சிகரெட்டில? விட முடியாமால் செத்துப் போய்? விட முடியவில்லையாம்....இது முன்பே தெரிந்திருந்தால் நீ சீக்கிரம்
செத்திருக்க மாட்டாய்...
ஆனால் காலம் போய் விட்டது .... உன்னால் செய்ய ஏதும் இல்லை....
அடுத்து உன் மகன்.... உன் தலை மாட்டில் உன் சவ முகத்தில்
உட்காரும் ஈக்களை ஓட்டிக் கொண்டு... பாரடா அந்தப் பாலகன் முகத்தை.... உன்
கைபிடித்து உன்னோடு
நடந்தவன்.... ' மை பாதர் இஸ்
கிரேட்' என்று கூடப்
படித்தவர்களிடம் சொல்லிவரும்
அந்த சிறுவனைப் பார்.... நீ செத்து விட்டாய்.... கூடவே அவனின் எதிர்
காலத்தையும் கையில் கொண்டு சென்று விட்டாய்..... அவனால் இனி படிக்க முடியுமா?
நீ இறந்த கவலையோடு கூடவே இன்னும் நிறைய
பொருளாதாரக் கவலைகள்....
இப்போது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஓடிக் கொண்டிருப்பது
என்னவென்று தெரியுமாடா?
'எங்கேயாவது செங்கல் சுமந்தாவது மூட்டை
தூக்கியாவது என் அம்மாவையும்
சகோதரியையும் காப்பாற்றுவேன்' எனும்
உறுதி உள்ளே ஓடிக்கொடிருக்கிறது....
தூ நாயே.... உன் மகனை எஞ்சினியர் ஆக்கப் போவதாய் சொல்லி பெருமை பட்டாயே... அதோ பார் நீ செத்து போன
பிறகு அந்த நாடார்
கடையில் பொட்டலம் கட்டும் பையன் உன் பையன்... அதோ அங்கே குப்பை பொறுக்கும்
பையன் உன் பையன்... அதோ அங்கே வாயில் துண்டு பீடி வைத்து ஐந்து ரூபாய் கட்டி
சீட்டு ஆடுபவன் உன் பையன்... நீதான் எல்லாவற்றிற்கும் காரணம்....
இருபது வயதில் அவன் திருட்டு வழக்கில் ஜெயிலுக்குப் போகும்போது
போலீஸ்காரன் கேட்கும் கேள்வி
' உன் அப்பா
பேர் என்ன? '
'அவன் ஒரு
பொறம்போக்கு சார்..... சிகரெட் குடிச்சி செத்துட்டான்... என்
சின்ன வயசிலேயே.... அவன் மட்டும்
உசிரோட இருந்தா என்னை இஞ்சினியருக்கு படிக்க வைக்கிறேன்ன்னு சொல்லி இருந்தான் சார்' ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உன் மகனின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஓட்டப் பட்டுள்ளது
அதில் அவன் பெயர்
கீழே உன்பெயர்....
நீ அமானுஷ்யமாக அழுதுகொண்டு இருக்கிறாய்.... உன் மகன் என்றோ சொன்னது உன் காதில் ஒலிக்கிறது
' மை பாதர் இஸ் க்ரேட்!... மை பாதர் இஸ் பெஸ்ட்'
நீ கடைசியாக இழுத்த சிகரெட் நினைவிற்கு வருகிறதா? என்ன பிரயோஜனம்.... நீ இறந்து விட்டாய்... நான் ஒரு மடையன் அன்றே
சொன்னேன் சிகரெட்டை விட்டு விடு என்று ... கேட்டாயா? இதோ பார் உன் மீது வெறுப்போடு நானும் உன் சவத்திற்கு மாலை போடுகிறேன்
.... படு பாவி ... ராட்சசா ...
ஒரே ஒரு வார்த்தை நான் சொன்னதைக் கேட்டிருந்தால் உன் குடும்பத்திற்கு இது நடந்திருக்குமா?
உன் மகள்..... காலம் புரட்டிப் போட்டுவிட்ட இந்த தற்காலத்தில் பெண் போகப் பொருள்
என்று மட்டுமே அறியப்
படும் இந்த உலகில் உன் மகள் மட்டும் என்ன எலிசபெத் ராணியா என்ன? படிக்க முடியாமல் போகும் அவளுக்கு இருக்கவே இருக்கிறது ஒரு
எக்ஸ்போர்ட் கார்மென்ட்
கம்பனி... கூடவே அவளுக்கு சனி ஞாயிறுகளில் கம்பனி குடுக்க வித விதமான ஆண்கள்
தயார் .... உன் மகளுடன்... காரணம் அவளாடா? நீதாண்டா மூடா! முட்டாளே... தெரு முக்கில் உன் மகள் நின்று
கொண்டிருக்கிறாள்.... யாருடனோ வெளியில் செல்ல..... அவளை என்ன ஆகவேண்டும் என்று கனவு கண்டாய்?
டாக்டர்? இஞ்சினியர்? CA ? பார்
என்ன ஆகி இருக்கிறாள்? எல்லாம்
உன்னால்தானடா பிணமே!
நீதானேடா காரணம்... படித்த முட்டாளே...... நீ என்ன அம்பானி
மாதிரி சொத்தை விட்டுச் சென்றாயா?
கற்பனை செய்.... உன் மனைவி இன்னொருத்தன் பிடியில், உன் இஞ்சினியர் மகன் திருட்டு வழக்கில் ... காலம் பூராவும் திருடனாக..... உன் மகளை
வாழ விடாத இந்த
சமுதாயம்....
எதுவும் செய்யாமல் உன் மனைவியை எதிரியாய்
நினைக்கும் உன்
தமக்கைகள்...ஒவ்வொரு நாளும் உன் படத்திற்கு மாலையிட்டு அழும் உன் உயிரினும் மேலான தாய்..... மனதில் வலியுடனும்
வயோதிகத்துடனும் போராடும்
உன் தந்தை .... உன் ஆதரவின்றி தினம் தினம் செத்து மடியும் இவர்கள்.
.
.
.
.
.
கற்பனையை நிறுத்து......அழுவதையும் நிறுத்து..... உன் சினிமா
முடிந்தது.....காட்சி முடிந்தது....
உன் கண்கள் அழுது உன் மனது கனத்து அடுத்து நீ என்ன சொல்லப்
போகிறாய் என்று எனக்குத் தெரியும்....
'என்ன ஆனாலும்
சரி.... என் புகைப் பழக்கத்தை இந்த நொடியில் விட்டு விட்டேன்' என்று....
நல்லது நண்பா... இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்..... வா
நல்ல வாழ்க்கைக்கு உன்னை நான் கைபிடித்து அழைத்துப் போகிறேன்...
அந்த வாழ்க்கையில் உனக்கு நோயில்லை... உன் மனைவியில் ஆயுட்கால
பாது காவலன் நீ,
நீ விரும்பியபடி உன் மகன் ஒரு இஞ்சினியர்...
நீ கனவு கண்டபடி உன் மகள் பாதை தெரியாமல் போகவில்லை... நீ கைபிடித்து அழைத்து சென்று
அவளை ஒரு நல்லவனுடன்
கைபிடித்துக் கொடுக்கப் போகிறாய்....
இனி அடுத்த சிகரெட் உங்களுக்கு பிடிக்க மனம் வராது... அப்படி வந்தால் இந்த
ஸ்டேடஸ் இல் இட்டுள்ள
படத்தைப் பாருங்கள்.... ஒருவளை ஒரு ஆணின் கையில் உள்ள அவள் உங்கள் மனைவியாகவோ உங்கள் மகளாகவோ இருக்கலாம்..... இந்த எண்ணம்
எப்போதும் இருக்கட்டும்...
24 மணி நேரம் புகை பிடிக்காமல்
கடத்தி விட்டால் நீ வென்று விட்டாய் ....எமனை...
நீ இனி சாகப் போவதில்லை.... நன்றாக வாழப் போகிறாய்.
கடவுளுக்கு நன்றி சொல்.....உன்னை சாத்தானிடமிருந்து
காப்பாற்றியதற்கு...!
நன்றி : டிமிடித் பெட்கோவ்ஸ்கி.